சரிகமபத நீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரிகமபத நீ
இயக்கம்பார்த்திபன்
தயாரிப்புபார்த்திபன்
இசைதேவா
நடிப்புபார்த்திபன்
ரோஜா
சங்கீதா
வைத்தி
வினு சக்ரவர்த்தி
சின்னி ஜெயந்த்
மனோரமா
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சரிகமபத நீ (Sarigamapadani) ரா. பார்த்திபன் இயக்கத்தில் 1994 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பார்தோபன், சங்கீதா, விஜயகுமார், மனோரமா, வினு சக்ரவர்த்தி, சின்னி ஜெயந்த், பெரிய கருப்பு தேவர் மற்றும் பலர் நடித்திருந்தனர். சீதா தயாரிப்பில், தேவா இசை அமைப்பில், 10 பிப்ரவரி 1994 ஆம் தேதி இப்படம் வெளியானது. எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் வணிக ரீதியில் தோல்வி அடைந்தது.[1][2][3][4][5][6][7]

நடிகர்கள்[தொகு]

ஆர். பார்த்திபன், சங்கீதா, விஜயகுமார், மனோரமா, வினு சக்ரவர்த்தி, சின்னி ஜெயந்த், பெரிய கருப்பு தேவர், வைத்தி, பிரசன்னா குமார், தளபதி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

குலசேகரன் (ஆர். பார்த்திபன்) ஒரு மதுபானக் கடை முதலாளி. அவனுக்கு கல்லூரியில் நேரம் கழிப்பது மிகவும் பிடித்த ஒன்று. மேலும், பெண்களை மயக்கி தன்வசப்படுத்துவதை வழக்கமாக கொண்டவன். அவனது தந்தை கபாலி (வினு சக்ரவர்த்தி) குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர், அவனது தாய் மிகவும் சாதுவானவர்.

ஒரு திருமண விழாவில், சங்கீதா எனும் இளம் பெண்ணை தன் வசப்படுத்த முயல்கிறான் குலசேகரன். துவக்கத்தில் அவனை பிடித்திருந்தாலும், குலசேகரன் தவறாக நடந்துகொண்டதால் அவனை விட்டு விலகிச் செல்கிறாள் சங்கீதா.

பின்னர், அர்ச்சனா எனும் கல்லூரி மாணவியை தன் வசப்படுத்த முயல்கிறான் குலசேகரன். அவளும் குலசேகரன் வலையில் வீழ்கிறாள். இருப்பினும், அவர்களது உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. விளையாட்டாக காதலித்ததாக தெரிவித்தாள் அர்ச்சனா. இதே போல் பல முறை நடப்பதால், மனமுடைந்த குலசேகரன் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறான். பின்னர் குலசேகரனுக்கு என்னவானது எனபது தான் மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். புலமைப்பித்தன் இயற்றிய ஒன்பது பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1994 ஆம் ஆண்டு வெளியானது.[8][9]

வ. எண் பாடல் பாடகர்கள் நீளம்
1 "காலேஜ் தொறஞ்சிருச்சு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:57
2 "ஹே கல கல" எஸ். பி. பாலசுப்பிரமணியம், இரா. பார்த்திபன் 5:07
3 "சரிகமபத நீ" எஸ். பி. பாலசுப்பிரமணியம், தேவா 4:03
4 "ஏ வாடி ச்சி போயா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:18
5 "பைத்தியம் பைத்தியம்" சங்கீதா சங்கீத சஜித் 1:23
6 "ஜிந்தாபாத் ஜிந்தாபாத் " எஸ். பி. பாலசுப்பிரமணியம், இரா. பார்த்திபன் 4:12
7 "பூவுமில்லை பொட்டுமில்லை" மனோரமா 2:52
8 "டிங் டாங்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:51
9 "கில்லி அடிச்சவன" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:33

மேற்கோள்கள்[தொகு]

  1. "http://spicyonion.com/movie/sarigamapadhanee/". http://spicyonion.com/movie/sarigamapadhanee/. 
  2. "http://www.gomolo.com/sarigamapadhanee-movie/11813". http://www.gomolo.com/sarigamapadhanee-movie/11813. 
  3. "www.jointscene.com". http://www.jointscene.com/movies/kollywood/Sarigamapadani/7607. 
  4. "cinesouth.com". http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=sarigamapadhanee. 
  5. "https://groups.google.com/forum/#!topic/soc.culture.tamil/DkYZjPTDnMU". https://groups.google.com/forum/#!topic/soc.culture.tamil/DkYZjPTDnMU. 
  6. "https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ". https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ. 
  7. "www.indolink.com". http://www.indolink.com/tamil/cinema/Specials/98/Jan/winners/best1997.htm. 
  8. "https://itunes.apple.com/in/album/sarigamapathanee/id587002699". https://itunes.apple.com/in/album/sarigamapathanee/id587002699. 
  9. "http://www.saavn.com/s/album/tamil/Sarigamapathanee-2013/-4JcAKw8HfU_". http://www.saavn.com/s/album/tamil/Sarigamapathanee-2013/-4JcAKw8HfU_. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிகமபத_நீ&oldid=3659973" இருந்து மீள்விக்கப்பட்டது