சரஸ்வதி ராம்நாத்
சரஸ்வதி ராம்நாத் Saraswathi Ramnath | |
|---|---|
| பிறப்பு | 7 செப்டம்பர் 1925 தாராபுரம், பழைய கோயம்புத்தூர் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
| இறப்பு | 2 ஆகத்து 1999 (அகவை 73) பெங்களூர், கருநாடகம், இந்தியா |
| தொழில் | எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் |
| மொழி | தமிழ், இந்தி |
| வகை | சிறுகதை, நாடகம், புதினம் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தர்பாரி ராகம் |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (1993) |
சரஸ்வதி ராம்நாத் (7 செப்டம்பர் 1925 - 2 ஆகத்து 1999) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்தும் இந்திக்கும் செய்த மொழிபெயர்ப்புக்களுக்காக பெரிதும் அறியப்படுகிறார்.[1] சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப் படைப்புக்களை மொழியாக்கம் செய்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சரஸ்வதியின் சொந்த ஊர் தாராபுரம் ஆகும். இவரின் தந்தை அளித்த ஊக்கத்தினால் இந்தி மொழியை கற்றார். திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தார். சிறுகதை ஆசிரியராக விரும்பி பல சிறுகதைகளை எழுதினார். தினமணிக் கதிர் ஆசிரியராக இருந்த துமிலன் இவரை மொழிபெயர்க்கும் ஆர்வத்தை உருவாக்கினார். இவர் மொழிபெயர்த்த கதைகளை வெளியிட்டு உதவினார்.[2]
இதன் பிறகு இந்தி மொழிப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார். இந்தி மட்டுமல்லாமல் வேறு இந்திய மொழிகளில் இருந்து இந்திக்கு மொழிபெயர்க்கபட்ட படைப்புகளை இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்தார். இவரின் மகன் மருத்துவராகி பெங்களூருக்கு பணி நிமித்தமாக செல்லவேண்டி இருந்ததால் இவரும் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.
பணி
[தொகு]மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய நமது சமூகப் பார்வையே குறுகியதாக உள்ளது. படைப்பிலக்கியத்துக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும் மரியாதையும் மொழிபெயர்ப்புகளுக்கு அளிக்கப்படுவதில்லை. மொழிபெயர்ப்பும் ஒரு படைப்பாக்கம் என்று ஏற்றுக்கொள்ளப்படாத வரையில் இந்நிலை நீடிக்கத்தான் செய்யும். ஏன் என்பதற்கு என்னிடம் நீண்ட பெருமூச்சுதான் பதில் என்று தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்பின் நிலை குறித்து கருத்து கூறி உள்ளார்.[3]
படைப்புகள்
[தொகு]- தர்பாரி ராகம்[4][1]
- ராஜநர்த்தகி
- கூர்ஜரத்தின் செல்வன்
- ஜெய சோமநாத்
- தேவதாசி
- புயலும் ஒளியும்
- வீரசுதந்திரம்
- சப்தபதி
- கங்கை தாய்
- ராதையுமில்லை , ருகுமணியுமில்லை
- நமக்கு நாமே அந்நியர்கள்
- கோதானம்[5] (2003)
- இனி வீடு திரும்ப வேண்டும் (தொகுப்பாளர்: பாவண்ணன், 2002)
விருதுகள்
[தொகு]- பல்வேறு இந்திய மொழிகளில் உள்ள சிறந்த நாடகங்களை, இந்திய மொழி நாடகங்கள் என்ற தலைப்பில், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தமையை சாகித்திய அகாதமி பாராட்டி, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம் ஆண்டில் வென்றார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மொழிபெயர்ப்புக் "கலைச்செல்வி'!
- ↑ மொழிபெயர்ப்பு முன்னோடி: சரஸ்வதி ராம்நாத், கட்டுரை, பாவண்ணன், இந்து தமிழ் திசை, 7 செப்டம்பர், 2025
- ↑ மொழிபெயர்ப்புக் "கலைச்செல்வி'!
- ↑ அதிகாரத்தின் சங்கீதம் | நாவல் வாசிகள் 13, கட்டுரை, எஸ். ராமகிருஷ்ணன், இந்து தமிழ் திசை, 29 சூன் 2025
- ↑ நம்பிக்கையின் உருவம் | நாவல் வாசிகள் 21, கட்டுரை, எஸ். ராமகிருஷ்ணன், இந்து தமிழ் திசை, 8 செப்டம்பர் 2025
- ↑ மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதுகள் பெற்றவர்கள் விவரம்