உள்ளடக்கத்துக்குச் செல்

சரவணப் பொய்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவணப் பொய்கை முகப்பு
திருப்பணி கல்வெட்டு

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திரு ஆவினன் குடியில் முருகன் குழந்தை வேலப்பர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சரவணப் பொய்கையாகும். இந்த சரவணப் பொய்கையானது மற்றப் படைவீடுகளில் உள்ள தலதீர்த்தங்களைப் போன்று சதுர வடிவிலோ, வட்ட வடிவிலோ இல்லாமல் கிணறு போன்று அமைந்துள்ளது.

இதனைத் திருப்பூர் மாவட்டம், உட்மலை வட்டம், வீதம்பட்டி வருவாய் கிராமத்தின் உட்கடைக் கிராமமான பொம்மநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சட்டி சாமி என்கிற சாது திருப்பணி செய்துள்ளார் என இங்குள்ள கல்வெட்டு (படம்-2) தெரிவிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவணப்_பொய்கை&oldid=3082264" இலிருந்து மீள்விக்கப்பட்டது