சரளா பிர்லா
சரளா பிர்லா | |
---|---|
சரளா பிர்லா | |
பிறப்பு | குச்சாமான், ராஜஸ்தான், இந்தியா | 23 நவம்பர் 1923
இறப்பு | 28 மார்ச்சு 2015 புது தில்லி, இந்தியா | (அகவை 91)
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | கல்வியாளர் |
வாழ்க்கைத் துணை | பசந்து குமார் பிர்லா |
சரளா பிர்லா (Sarala Birla)(23 நவம்பர் 1923 - 28 மார்ச் 2015)[1] என்பவர் இந்தியத் தொழிலதிபர்களின் ஒருவரான பிர்லா குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஆவார். இவர் இந்திய பொதுக் கல்வியின் மேம்பாட்டில் ஆர்வம் காட்டினார். இவர், தனது கணவனுடன் சேர்ந்து, தமது குடும்பத்தின் ஆதரவில் சுமார் 45 கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]சரளா பிர்லா பாரம்பரிய மார்வாடி இந்து குடும்பத்தில் பிறந்தார். காந்திய கல்வியாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிரிஜ்லால் பியானி மற்றும் சாவித்திரி தேவி பியானி ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவர் ராஜஸ்தானின் குச்சாமனில் தனது தாய்வழி பாட்டியின் வீட்டில் பிறந்தார். இவருடைய குடும்பம் ராஜஸ்தானைச் சேர்ந்தது. ஆனால் இவருடைய தந்தை மகாராட்டிராவின் அகோலாவில் குடியேறினார். அகோலாவில் தான் சரளா வளர்ந்தார். சரளா உள்ளூர் அரசுப் பள்ளியில் மராத்தி மொழியில் கல்வி பயின்றார். இதனால் சரளா மராத்தி மொழியிலும், அவரது தாய் மொழியான மார்வாரி மொழியிலும் சரளமாக மொழியாற்றல் பெற்றார். ஆறாம் வகுப்பு முதல் பள்ளியில் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. இந்த நேரத்தில் சரளா இந்தி மொழியினையும் கற்றுக்கொண்டார். சரளா பல மொழி பேசும் மக்களிடையே வளர்ந்ததால் தானும் பலமொழிகளைக் கற்றுக்கொண்டார். மேலும் முற்றிலும் புதிய மொழியான பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதிலும் உறுதியாக இருந்தார்.
ஏப்ரல் 1941இல் சரளா பிர்லா பசந்து குமார் பிர்லாவினை மணந்தார். ஜம்னலால் பஜாஜ் மற்றும் மகாத்மா காந்தியால் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தப்பட்டனர். பசந்து குமார் கன்சியாம் தாசு பிர்லாவின் மகன் ஆவார்.[2] இந்த திருமணத்திற்குப் பிறகு சர்லா பிர்லா ஒரு பெரிய குடும்பத்தின் குலத்தலைவியானார்ர். இவர்கள் சில நேரங்களில் "பிர்லா பேரரசின் முதல் தம்பதி" என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்.[3] இவர்களுக்கு ஆதித்யா விக்ரம் பிர்லா என்ற மகன் இருந்தார். இவரது ஒரே மகனான ஆதித்யா விக்ரம் பிர்லா 1995ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறந்தார், பின்னர் இவரது பாட்டியான குமார் மங்கலம் பிர்லாவும் இறந்தார்.
அருளடைமை
[தொகு]இவர் தனது சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளின் மூலம் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்தார். பின்வரும் நிறுவனங்களை நிறுவி அதன் அறங்காவலர் அல்லது வேறுவிதமாக நிர்வாகத் தொடர்புகள் மூலம் சேவையாற்றுகின்றனர். இவற்றில் முக்கியமானவை: 1) பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகம், பிலானி, 2) பி. கே. பிர்லா பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், பிலானி, 3) பி.கே. பிர்லா கலை, அறிவியல் மற்றும் வணிக கல்லூரி, கல்யாண், 4) பி. கே. பிர்லா பொதுப் பள்ளி, கல்யாண், 5) மகாதேவி பிர்லா உலக கழகம், 6) மகாதேவி பிர்லா சிசு விகார், 7) பிர்லா கலை மற்றும் கலாச்சார அகாதமி, கல்கத்தா, 8) சுவார் சங்கம், கல்கத்தா, 9) சங்கீத கலா மந்திர், கல்கத்தா, 10) சங்கீத கலா மந்திர் அறக்கட்டளை, கல்கத்தா மற்றும் 11) பிர்லா பாரதி, கல்கத்தா ஆகும்.
கொல்கத்தாவில் உள்ள பிர்லா கலை மற்றும் கலாச்சார அகாதமியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சரளா பிர்லாவின் சேகரிப்பாகும். இது இந்தியாவின் தனியார் சேகரிப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பிர்லா கலை மற்றும் கலாச்சார கழகம் மற்றும் சங்கீத கலா மந்திர் இத்தம்பதியினரால் அமைக்கப்பட்டது ஆகும்.[4]
வாழ்க்கை
[தொகு]சரளா, சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தொண்டருமான பிரிஜ்லால் பியானியின் மகளாகப் பிறந்தார். வழக்கத்திற்கு மாறாக முற்போக்கான குடும்பத்தில் பிறந்த சரளாவிற்குப் பெண்கள் கல்வியின் அவசியத்தினால் சரளாவும் கல்வி கற்க வேண்டும் என்று நம்பினர். இவர்களின் திருமணம் ஜம்னாலால் பஜாஜ் மற்றும் மகாத்மா காந்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுப் பெற்றோர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது.[5] சரளா நினைவு கூறுகிறார்: [6]
- "நான் புனே, பெர்குசன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன், மணமகனைப் பார்க்க, பம்பாய், பிர்லா வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று எனக்கு ஒரு செய்தி வந்தது. நான் அங்குச் சென்றேன், ஒரு இரவு அங்கு இருந்தேன். அங்குப் பல சிறுவர்கள் இருந்தனர், யார் என்று எனக்குத் தெரியாது; நான் அங்கேயே தங்கினேன். நான் திரும்பி வந்தேன். இரண்டு-மூன்று மாதங்களுக்குப் பிறகு, காந்திஜி மற்றும் என் மாமனாரிடமிருந்து வர்தாவுக்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்தது. நான் புனேவிலிருந்து அங்குச் சென்றேன். தந்தை (கன்சியாம் தாசு பிர்லா) என்னிடம் கேட்டார், 'நீங்கள் பசந்தைப் பார்த்தீர்கள், நீங்கள் அவரை திருமணம் செய்யத் தயாரா இல்லையா? என்று இதுவரை பதிலளிக்கவில்லை.' நான், 'இல்லை, எட்டு-பத்து சிறுவர்கள் இருந்தனர், அதனால் எனக்கு அவர் யார் என்று எனக்குத் தெரியாது.' பிறகு நான் ஒரு பையனைப் பார்க்காததால் அவர் யார் என்று எனக்குத் தெரியாது. அவர் யார் என்று தெரியாமல் நான் அவரை மணக்கமாட்டேன்”. உடனே, காந்திஜி, 'அவள் சொல்வது சரிதான்' என்று சொன்னார். பிறகு அவர் உங்களுக்கிடையில் மீண்டும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாகக் கூறினார். நீங்கள் மீண்டும் வாருங்கள் என்றார். அதனால், நான், 'எனக்கு விடுமுறை இருக்கும்போதுதான், வருவேன்' என்றேன். தந்தை மிகவும் நல்லவர், அவர், 'சரி' என்றார். எனவே, எனக்கு விடுமுறை கிடைத்தபோது, நான் சென்றேன், நாங்கள் நவம்பர் 8 அன்று சந்தித்தோம்.
பசந்து குமார் பிர்லா ஒப்புக்கொள்கிறார், "நான் என் சகாக்களிடம் சொன்னேன், நான் படித்த ஒரு பெண் மீது ஆர்வம் காட்டுகிறேன், அவள் படித்திருந்ததால் - அவளைப் பார்க்காமலேயே அங்கீகரித்தேன்."
சரளா 73 வருடங்கள் பசந்து குமாருடன் திருமண வாழ்க்கையினை மேற்கொண்டுள்ளார். 91 வயதிலும், குடும்ப நிகழ்ச்சிகளின் போதும் பல்வேறு குழு நிறுவனங்களின் வருடாந்திர பொதுக் கூட்டங்களுக்குக் கணவனின் கையைப் பிடித்துக்கொண்டு, அவருடன் செல்வது ஒரு பழக்கமான நிகழ்வாக இருந்தது.[7]
2015 மார்ச் 28 அன்று, கன்சிராம் தாசு பிர்லாவின் 121வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சரளா தில்லியில் இருந்தார். சக்கர நாற்காலியில் செல்லும்போது மின் உயர்த்தி சம்பந்தப்பட்ட சிறிய விபத்தில் காயமடைந்து, முதுமை தொடர்பான இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். அப்பொழுது அவருக்கு வயது 91.[8]
இதையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sarala Birla passes away". The Hindu. 29 March 2015. https://www.thehindu.com/news/national/other-states/sarala-birla-passes-away/article7044629.ece. பார்த்த நாள்: 28 June 2018.
- ↑ "Story of India's prominent family".
- ↑ Unfolding the fascinating story of Birlas, Basant Kumar and Sarala Birla: Life Has No Full Stops released in Delhi, 9 September 2011
- ↑ Sarala Birla, Wife of BK Birla, passes away, DNA India, 28 March 2015
- ↑ Story of one of India's prominent business families, 5 March 2007, MoneyControl
- ↑ The Story Of Basant And Sarala Birla, Aaj Tak, 5 April 2015
- ↑ Sarala Birla A businessman's wife, who won hearts with her humanity, ET Bureau, 30 March 2015
- ↑ "सरला बिड़ला की संदिग्ध परिस्थिति में मौत". Dainik Jagran (in இந்தி). 28 March 2015.