உள்ளடக்கத்துக்குச் செல்

சரமை, தெய்வீக நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்ப்ப யாகசாலையில் நுழைந்த சரமையின் நாய்க்குட்டியை மன்னர் ஜனமேஜயனின் சகோதர்கள் அடித்து விரட்டுதல். அதற்கு பதிலடியாக சரமை யாகம் முடிவடையாமல் போவதாக என சபித்தல்

சரமை (Sarama) (சமசுகிருதம்|सरमा or देव-शुनी), மகாபாரதம் காவியத்தில் குரு நாட்டு மன்னர் ஜனமேஜயன் தனது தம்பியர் சுருதசேனன், உக்ரசேனன், பீமசேனன் ஆகியோருடன், குருச்சேத்திரத்தில் நீண்ட கால சத்ர சர்ப்ப யாகம் செய்து கொண்டிருந்தான். தெய்வீக சரமை நாயின் குட்டி ஒன்று சர்ப்ப யாகம் நடக்கும் யாகசாலையில் நுழைந்தது. குட்டி நாயயைக் கண்ட ஜனமேஜயனின் தம்பிகள் மூவராலும் அதனை நையப் புடைக்க அது, வலியுடன் கதறிக் கொண்டே தன் தாய் சரமையிடம் நடந்தவற்றை கூறி அழுதது. இதனைக் கேட்ட குட்டியின் தாய் சரமா, தனது குட்டியின் துயரைப் பொறுக்கமுடியாமல், ஜனமேஜயனும் அவனது தம்பிகளும் இருக்கும் அந்தப் பெரிய சர்ப்ப வேள்வி நடக்கும் இடத்திற்கு வந்தது.

தாய் நாய் சரமை ஜனமேஜயனிடம் கோபத்துடன் "இந்நாய்க் குட்டி எனது மைந்தன் எந்தத் தவறையும் செய்யவில்லையே; உனது வேள்வியின் நெய்யை இவன் நாவால் நக்கிக்க்கவும் இல்லை, தொடவும் இல்லை. நெய் இருக்கும் பக்கமே பார்வையைச் செலுத்தவில்லை. இவன் தண்டிக்கப்பட்டது எவ்வாறு?" என்று கேட்டது. அவர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பிறகு சரமா "எக்குற்றமும் செய்யாத என் மைந்தன் உங்களால் அடிக்கப்பட்டதால், நீங்கள் அறியாதிருக்கும் சமயத்தில் தீமை உங்களை வந்தடையட்டும்" என்று சபித்தது.[1][2]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. van Buitenen, J A B (1973). The Mahabharata: The Book of the Beginning. University of Chicago Press. p. 44. ISBN 0-226-84663-6.
  2. Mahabharata -SECTION III - Paushya Parva

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரமை,_தெய்வீக_நாய்&oldid=4359058" இலிருந்து மீள்விக்கப்பட்டது