சரபேசுவரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சரபமூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவ வடிவங்களில் ஒன்றான
சரபேசுவரர்

வேறு பெயர்(கள்): சிங்கநாதர்
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சரபேசுவரர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.

உத்திர காமிகாகமம் இந்த வடிவத்தினை ஆகாச பைரவர் என்று கூறுகிறது.[1] தத்வநிதி சிற்பநூல் இவ்வடிவத்திற்கு 32 கைகள் இருப்பதாக கூறுகிறது. இக்கால்களில் ஒன்று துர்க்கையமம்னை அனைத்தவாறு இருக்கும். இந்த வடிவத்தின் சக்தி தேவி அரிப்ரணாசினி.

வியாசர் இந்த மூர்த்தியை பரிகாரமற்ற துன்பத்திற்கும், நோய்களுக்கும், விஷபயம் மற்றும் பூத பிரேத உபாதைகள் ஆகியவற்றுக்கு வணங்கலாம் என்று கூறுகிறார்.

வேறு பெயர்கள்[தொகு]

  • நடுக்கந்தீர்த்த பெருமான்
  • சிம்மக்ன மூர்த்தி
  • சிம்ஹாரி
  • நரசிம்ம சம்ஹாரர்
  • சரபேஸ்வரர்
  • சரபர்

தோற்றம்[தொகு]

சரப மூர்த்தியின் ஓவியம்

சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.[2]

வடிவங்கள்[தொகு]

லிங்க சரபேஸ்வரர்[தொகு]

காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் நகரில் லிங்க உருவத்தில் சரபேஸ்வரர் உள்ளார். வேறு எங்கும் இவ்வாறு லிங்க சரபேஸ்வர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.[3]

உருவக் காரணம்[தொகு]

இரணியன் எனும் அசுரனைக் கொன்ற பின் நரசிம்மருக்குக் கோபம் தணியாமல் இருந்தது. அதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டிக் கொண்டார்கள். அவர்களை காக்க சிவன் எடுத்த அவதாரமே சரேபேஸ்வர வடிவமாகும்.

கோவில்கள்[தொகு]

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் கம்பகரேசுவரர் கோவிலில் சரப மூர்த்திக்கென தனிசந்நிதி உள்ளது. இங்குள்ள மூலவர் கம்பகரேஸ்வர சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இதற்கு நடுக்கம் தீர்த்த சுவாமி என்று பொருளாகும்.[4] திரிபுவனச் சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெற்றிருந்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய சிறப்பு மிக்க கோயில் திரிபுவனம் கம்பேசுவரர் கோயில். கம்பேசுவரனைத் தேவர்களின் நடுக்கம் தீர்த்த பெருமான் என்று போற்றுவர். இக் கோயிலின் முதன்மையான மூர்த்தி சிலை சரபேசுவரர் ஆகும் இவன் கட்டிய துர்க்காச்சி கோயில், தில்லையில் அமைத்த அம்பலம் ஆகிய இடங்களிலும் சரபேசுவரர் திருவுருவங்கள் உள்ளன. இராசராசன் தேவி கட்டிய திரைலோக்கிய சுந்தர கோயிலிலும் ஒரு சரபேசுவரரை அமைத்தான்.இலங்கை மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவ பூசைக்கு வருடம் ஒருமுறை தெய்வமுற்று ஆடுபவரில் மக்கள் நோய் அகற்ற முற்படுகிறார். இடங்களிலெல்லாம் சரபேசுவரரைப் போற்றும் பாடல்களைப் பாடவும், பூசனை வழிபாடுகள் நிகழ்த்தவும் பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் வழிவகை செய்தான். திருமலைநாதர் என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் சரபேஸ்வரர் குறித்து சரப புராணம் என்னும் தமிழ்நூலைப் பாடியுள்ளார்.

சரப மூர்த்தியைப் போற்றும் பிற பாடல்கள்[தொகு]

மடங்கலாய்க் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள்புரி அண்ணலே [5]
ஆகம் கனகனைக் கீறிய கோளாகி [6]
... இரணியனை
நடுக்கிய மா நரசிங்கனை சிம்புள் அதாய் நரல
இடுக்கிய பாதன் தில்லை தொழாவிட்ட ஏழையரே [7]
  • காஞ்சி புராணம்
செருக்கும் நரமடங்கல் ஆவி செகுத்துக் கொண்டு
ஒன்னார் குலங்கள் முழுது அழித்த உடையான் சரபத் திரு உருவம்
  • சிவப்பிரகாசர்
சிம்புளாய் மடங்கல் எறுழ்வலி கவர்ந்த திறன் [8]

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு. பதிப்பு 2005.

அடிக்குறிப்பு[தொகு]

  1. [சிந்தை நிறைக்கும் சிவவடிவங்கள் - பக்கம் 231]
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=3674 சரபேஸ்வரர் யார்?
  3. http://origin-www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2318&cat=3[தொடர்பிழந்த இணைப்பு] லிங்க சரபேஸ்வரர்
  4. http://temple.dinamalar.com/New.php?id=389 அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில்
  5. திருவிசைப்பா பாடல் 10
  6. கோயில் திருப்பண்ணியார் விருத்தம் 27
  7. கோயில் திருப்பண்ணியார் விருத்தம் 36
  8. சோண சைவ மாலை, சிவபுண்ணியப் படலம்

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரபேசுவரர்&oldid=3800058" இலிருந்து மீள்விக்கப்பட்டது