சரதோவ் எயர்லைன்சு விமானம் 703

ஆள்கூறுகள்: 55°17′59″N 38°23′25″E / 55.29972°N 38.39028°E / 55.29972; 38.39028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரதோவ் எயர்லைன்சு விமானம் 703
Photograph of the accident aircraft
மே 2017 இல் காணும் , ஆர் ஏ- 61704 வானூர்தி, தமதேதவோ வானூர்தி நிலையம்.
விபத்து சுருக்கம்
நாள்பெப்ரவரி 11, 2018 (2018-02-11)
சுருக்கம்Unknown, under investigation
இடம்ஸ்டேபனோவ்ஸ்கோய் அருகில், மாசுக்கோ மாகாணம்
55°17′59″N 38°23′25″E / 55.29972°N 38.39028°E / 55.29972; 38.39028
ஊழியர்6
உயிரிழப்புகள்71 (அனைவரும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஅண்டோனோவ் ஏ என்- 148 -100பி
இயக்கம்சரதோவ் எயர்லைன்சு
வானூர்தி பதிவுஆர் ஏ-61704
பறப்பு புறப்பாடுதமதேதவோ வானூர்தி நிலையம், மாஸ்கோ,  உருசியா
சேருமிடம்ஒர்ஸ்க் வானூர்தி நிலையம், ஒர்ஸ்க்,  உருசியா

சரதோவ் எயர்லைன்சு விமானம் 703 (Saratov Airlines Flight 703 (6W703/SOV703) இது, உருசியாவின் (Orsk Airport) சென்ற உள்ளூர் பயணிகள் வானூர்தி விபத்து பற்றியதாகும். 2018, பிப்ரவரி 11 அன்று, அண்டோனோவ் ஏ என்- 148 -100பி (Antonov An-148-100B) எனப்படும் ஒரு வானூர்தி புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 65 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட 71 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[1]

வானூர்தி[தொகு]

விபத்துக்குள்ளான இந்த வானூர்தி, “ஒரோனேழ் வானூர்தி தாயாரிப்பு கூட்டமைப்பு” (Voronezh Aircraft Production Association) தயாரிக்கப்பட்ட, “அண்டோனோவ் ஏ என்- 148 -100பி” (Antonov An-148-100B) வகை வானூர்தியாகும்.[2] ஆர் ஏ - 61704, எம் எஸ் என் 27015040004 (RA-61704, MSN 27015040004) பதிவு கொண்ட இவ்வானூர்தி, இரு முன்னேற்றம் பெற்ற டி - 436 (Progress D-436) எனும் இயந்திரத்தில் இயங்கக்கூடியது. மேலும், மே 2010 இல் முதன்முதலாக பறக்கவிட்ட இந்த வானூர்தி, 2010, சூன் 23 ஆம் நாள் ‘ரோசியா ஏர்லைன்சு’ (Rossiya Airlines) நிறுவனம் பதிவு செய்தது.[3]

விபத்து[தொகு]

சரடோவ் ஏர்லைன்ஸ் விமானம் 703 உயரம் மற்றும் வேகம்
சரடோவ் ஏர்லைன்ஸ் விமானம் 703 விமானத்தின் விமான பாதை

இந்த வானூர்தி மாஸ்கோ தமதேதவோ வானூர்தி நிலையத்திலிருந்து, ஒர்ஸ்க் விமான நிலையத்திற்குச் செல்லும் ஒரு வழக்கமான திட்டமிடப்பட்ட உள்நாட்டு பயணச் சேவையில் ஈடுபட்டு வந்த வானூர்தியாகும். மேலும், மாஸ்கோவிலிருந்து 14:00 மணியளவில் புறப்படவேண்டிய இந்த 703 விமானம்,[4] தாமதமாக 14:24 க்கு புறப்பட்டதாக கருதப்படுகிறது.[5]

மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் வானூர்தியின் வேகமும், உயரமும் ஏற்ற இறக்கமாக மாறிமாறி காணபட்டது. 703 விமானம் விபத்துக்கு சில நிமிடத்திற்கு முன், 1,800 மீட்டர் (5,900 அடி) உயரத்திலும், மணிக்கு சுமார் 600 கிலோமீட்டர் வேகத்திலும் பறந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் உடனடியாக உயரம் இழந்து 900 மீட்டர் (3,000 அடி) உயரத்தில் கதிரலைக் கும்பாவிலிருந்து மறைந்து காணாமற்போனது.[6]

பயணிகள் மற்றும் பணியாளர்கள்[தொகு]

விபத்துக்குள்ளான விமான வெளிப்பாட்டின் படி, 65 பயணிகள் மற்றும் 6 சேவைப் பணியாட்கள் இருந்ததாக அறியப்படுகிறது. அதில், பெரும்பாலான பயணிகள், ஒரன்பூர்க் (Orenburg) மாநகரில் வசிப்பவர்கள் ஆகும்.[7]

பயணிகள் மற்றும் 703 விமான குழுவினர்கள் [8][9]
நாட்டவர் பயணிகள் பணியாளர்கள் மொத்தம்
 உருசியா 63 6 69
 அசர்பைஜான் 1 0 1
 சுவிட்சர்லாந்து 1 0 1
மொத்தம். 65 6 71

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]