சரண்யா துராடி சுந்தர்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரண்யா துராடி சுந்தர்ராஜ்
பிறப்பு22 அக்டோபர் 1987 (1987-10-22) (அகவை 32)
சென்னை
தமிழ்நாடு
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்சரண்யா
பணிசெய்தி வாசிப்பாளர்
நடிகை
மாதிரி நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2015 – தற்போதுவரை

சரண்யா துராடி சுந்தர்ராஜ் ( பிறப்பு:22 அக்டோபர், 1987) ஓர் தமிழ் செய்தி வாசிப்பாளர், மாதிரி நடிகை மற்றும் நடிகை ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை (2017-2019) என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஆனார்.[1] இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சரண்யா துராடி சுந்தர்ராஜ் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு சென்னை யில் பிறந்தார். இவரது அப்பா சுந்தர்ராஜ் ஆவார். இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தார். அவர் எம். ஓ. பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி, அங்கு அவர் ஒளிபரப்பு தொடர்பு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சேர்ந்தார். அந்தத் தொலைக்காட்சியில் செய்தி நிருபராக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சினிமா பிரபலங்களின் செய்தி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். புதிய தலைமுறையில் பணிபுரியும் போது, ​​அவருக்கு இரண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது; சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 4 ஆண்டுகள் பணியாற்றியனார். இவரின் பணியை போற்றி புதிய தலைமுறை தமிழன் விருது என்ற விருதுவழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் வேலையை விட்டுவிட்டு சில மாதங்கள் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் இந்தியா திரும்பிய அவர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் மூத்த செய்தி நிருபராக சேர்ந்தார்.

இவர் 2015ஆம் ஆண்டு வினோதி என்ற காதாபாத்திரத்தில் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை[2][3] என்ற தொடரில் சரண்யா விக்ரம் என்ற காதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் இவருக்கு நல்ல வரவேட்ப்பை பெற்றது. இதில் நடித்ததற்காக விஜய் தொலைக்காட்சி புதுமுக நடிகை என்ற விருதை வென்றார்.

அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தெலுங்கு மொழி தொடரில் நடித்தார். இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா என்ற தொடரின் தெலுங்கு மொழி பாதிப்பாகும். அதே ஆண்டில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காதல் அதிரடி தொடரான ரன் என்ற தொடரில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[4] இவருக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா நடிக்கின்றார்.

தொலைக்காட்சி[தொகு]

திரைப்படம்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2012–2015 செய்தி வாசிப்பாளர் புதிய தலைமுறை
2016 மூத்த செய்தி நிருபர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி
2017-2019 நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா விக்ரம் விஜய் தொலைக்காட்சி
2019 ரோஜா ரோஜா ஜெமினி தொலைக்காட்சி
2019 ரன் திவ்யா சன் தொலைக்காட்சி
2019 - ஒளிபரப்பில் ஆயுத எழுத்து இந்திரா விஜய் தொலைக்காட்சி
2020 - ஒளிபரப்பில் பங்காரு கோடலு திவ்யா ஜெமினி தொலைக்காட்சி
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2012 ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி அக்‌ஷரா தமிழ்
2015 சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது விநோதினி தமிழ்
2019 என்4 தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]