சரண்யா சசி
சரண்யா சசி Saranya Sasi | |
---|---|
பிறப்பு | 1986 பழையங்காடி, கேரளம், இந்தியா |
இறப்பு | திருவனந்தபுரம், கேரளா, இந்தியா | 9 ஆகத்து 2021 (aged 35)
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2003–2018 |
பெற்றோர் | கீதா |
வாழ்க்கைத் துணை | பினு சேவியர் (தி. 2014) |
சரண்யா சசி (Saranya Sasi) (1986 - 9 ஆகஸ்ட் 2021) மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகை ஆவார்.[1] நடிகை சீமா ஜி. நாயருடன் நல்ல உறவை பேணி வந்தார்.[2]
இளமை வாழ்க்கை
[தொகு]சரண்யா தனது 6 முதல் 8 ஆம் வகுப்பை கண்ணூர், ஜவகர் நவோதயா வித்யாலயாவில் முடித்தார். பின்னர், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.[3]
தொழில் வாழ்க்கை
[தொகு]2006 ஆம் ஆண்டில் பாலச்சந்திர மேனன் இயக்கிய சூரியோதயம் என்ற தொடர் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இது தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.[4] மலையாளத்தில் சாக்கோ ரந்தமான் (2006) மற்றும் தமிழில் பச்சை என்கிற காத்து (2012) ஆகிய படங்களில் அறிமுகமானார்.[5] தனது தொழில் வாழ்க்கையில், சோட்டா மும்பை (2007) அலி பாய் (2007) தலப்பாவு (2008) பாம்பே மார்ச் 12 (2011) அன்னமரியா காளிபிலானு (2016) போன்ற மலையாள படங்களில் நடித்தார். சுவாமி அய்யப்பன், கூட்டுக்காரி, இரகசியம், ஹரிச்சந்தனம் (ஏசியாநெட்) அவகாசிகள், மல்காமர் மற்றும் கருதமுத்து போன்ற பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார்.[6][7]
சொந்த வாழ்க்கை
[தொகு]சரண்யா நவம்பர் 2014 இல் பினு சேவியர் என்பவரை மணந்தார். ஆனால் பின்னர் இவர்கள் விவாகரத்து செய்தனர்.[8]
நோயும் மரணமும்
[தொகு]2012 ஆம் ஆண்டில், சரண்யாவிற்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக நடிப்புலகிலிருந்து விலகினார். மே 2021 இல், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது இவரது உடல்நிலையை மேலும், மோசமாக்கியது.[9]
சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2021 ஆகஸ்ட் 9 அன்று ம் காலமானார்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malayalam actress Saranya dies at 35". 9 August 2021. http://www.ptinews.com/news/12645581_Malayalam-actress-Saranya-dies-at-35.html.
- ↑ asianetnews (2013-02-25). TV/Film Actress Seema G Nair and Saranya in Attukal Ponkala 2013. பார்க்கப்பட்ட நாள் 2024-11-01 – via YouTube.
- ↑ ലേഖകൻ, മാധ്യമം (9 August 2021). "നോവ് ബാക്കിയാക്കി ശരണ്യ മടങ്ങി; ആ പുഞ്ചിരി ഇനി ഓർമ്മയുടെ സ്ക്രീനിൽ..." madhyamam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
- ↑ "Saranya Sasi passes away after battling cancer for 9 years". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
- ↑ "Breaking News: Famous malayalam actress passes away". East Coast Daily English (in அமெரிக்க ஆங்கிலம்). 9 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
- ↑ "Malayalam actor Saranya Sasi dies at 35". The Indian Express (in ஆங்கிலம்). 10 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
- ↑ "Actor Saranya Sasi passes away at 35" (in en-IN). The Hindu. 9 August 2021. https://www.thehindu.com/news/national/kerala/actor-saranya-sasi-passes-away-at-35/article35817820.ece.
- ↑ "Saranya Sasi passes away after battling cancer for 9 years". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021."Saranya Sasi passes away after battling cancer for 9 years". OnManorama. Retrieved 10 August 2021.
- ↑ "35-year-old actress Saranya Sasi passes away after battling cancer for 10 years - Times of India" (in en). 9 August 2021. https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/35-year-old-actress-saranya-sasi-passes-away-after-battling-cancer-for-10-years/articleshow/85177303.cms.
- ↑ "Malayalam actor Saranya Sasi dies at 35". The Indian Express (in ஆங்கிலம்). 10 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
- ↑ "Malayalam actress Saranya Sasi dies at 35 after battling cancer for 10 years". India Today (in ஆங்கிலம்). 9 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.