சரசுவதி சம்மான் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரசுவதி சம்மான் விருது (Saraswati Samman) என்பது இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் உள்ள சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் விருதாகும். 1991 ஆம் ஆண்டு கே.கே. பிர்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் மதிப்பு பதினைந்து இலட்சம் இந்திய ரூபாய் ஆகும்.

தேர்வு முறை[தொகு]

இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படைப்பு இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட ஆட்சி மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அமைந்திருக்க வேண்டும். விருது வழங்கப்படும் வருடத்திற்கு முந்தைய பத்தாண்டு காலகட்டத்தில் படைப்பாளி எழுதிய படைப்புகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதுவரை விருது பெற்றவர்கள்[தொகு]

 • 1990 - இஸ்மத் சுக்தாய் (உருது)
 • 1991 - ஹரிவன்ஸ்ராய் பச்சன்- நான்கு பாகங்களாக வெளியிடப்பட்ட இவரின் சுயசரிதைக்காக
 • 1992 - ஸ்ரீ ராமகாந்த் ரத்- ஒரிய மொழியில் எழுதப்பட்ட "ஸ்ரீ ராதா" எனும் கவிதை தொகுப்பிற்காக
 • 1993 - ஸ்ரீ விஜய் டெண்டுல்கர்- கன்யாடன் எனும் மராத்தி நாடகத்திற்காக
 • 1994 - ஹர்பஜன் சிங்
 • 1995 - பலமணி அம்மா (நிவேதியம்)
 • 1996 - சம்சூர் ரஹ்மான பரூக்கி
 • 1997 - மனுபாய் பஞ்சோலி
 • 1998 - ஷங்கா கோஸ்
 • 1999 - இந்திரா பார்த்தசாரதி
 • 2000 - மனோஜ் தாஸ் (அமிர்த பழா
 • 2001 - தலீப் கவுர் திவானா
 • 2002 - மகேஷ் எல்குஞ்வர்
 • 2003 - கோவிந்த் சந்திர பாண்டே
 • 2004 - சுனில் காங்கோபத்தாய்
 • 2005 - கே. அய்யப்ப பணிக்கர்
 • 2006 - ஜெகதீஷ் பிரசாத்
 • 2007 - நய்யர் மௌசத்
 • 2008 - லக்ஷ்மி நந்தன்
 • 2009 - சுர்ஜித் பாத்கர்
 • 2010 - எஸ். எல். பைரப்பா
 • 2011 - ஏ.ஏ. மணவாளன்- 2005 ஆம் ஆண்டில் வெளியான இராமகதையும் இராமாயணங்களும் படைப்புக்காக
 • 2012 - சுகதாகுமாரி[1]
 • 2013 - கோவிந்த் மிஸ்ரா[2]
 • 2014 - வீரப்ப மொய்லி

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]