சரகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரகானின் அரச மாளிகை முன்பு ஒரு இசைக்குழு
குசானர் காலத்தைச் சேர்ந்த பீமகாளி கோவிலில் உள்ள ஒரு உருவம்
வெள்ளிக் கதவு
பீமகாளி கோவில்
சரகானிலுள்ள கோவிலின் நுழைவு
கட்டிடக்கலையின் தனித்துவமான கலவை
பீமகாளி கோயிலிருந்து இமயமலையின் காட்சி.
அரண்மனையை ஒட்டிய சிறிய கோயில்

சரகான் (Sarahan) என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். [[பீம கோயில்}பீமகாளி கோயிலின்]] தளமான இது முதலில் பீமதேவி கோயில் (பீமகாளி) என்று அழைக்கப்பட்டது. இது முன்னாள் புசாகர் மாநிலத்தின் ஆட்சியாளர்களின் தலைமை தெய்வமான பீமகாளி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. சிம்லாவிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். பழைய இந்திய-திபெத்திய சாலைக்கு அருகில் உள்ள இந்த நகரம் "கின்னௌரின் நுழைவாயில்" என்று அழைக்கப்படுகிறது. [1] ஏழு கிலோமீட்டர் கீழே (17 கி.மீ. சாலை வழியாக) சத்லஜ் ஆறு ஓடுகிறது. புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சோனிட்பூருடன் இது அடையாளம் காணப்படுகிறது. [2] இது புசாகர் இராச்சியத்தின் கோடைகால தலைநகராக இருந்தது. இராம்பூர் புசாகரின் குளிர்கால தலைநகராக கருதப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் (முன்னாள் மன்னர் பதம் சிங்கின் மகன்) மேலும் சரகானில் "ராஜா சாகப்" என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1962 முதல் சட்டமன்றம்/நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஆறு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவரது மனைவி ராணி பிரதிபா தேவியும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

பீமகாளி கோயிலில் புசாகர் இராச்சியத்தின் "குலதேவி" யாக (வம்சத்தின் தலைமை தெய்வம்) இருந்தது. பீமகாளி கோவிலில் இந்து மற்றும் வச்சிரயான பௌத்தச் சிலைகளும் வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. அவை பண்டைய இந்திய-திபெத்திய சாலை வழியாக இந்தியா மற்றும் திபெத்திய பகுதிகளுக்கு இடையேயான வர்த்தகத்தை பிரதிபலிக்கின்றன. பழைய இந்திய-திபெத்திய சாலையின் தடயங்கள் இன்றும் சரகான் அருகே உள்ள சலாபாக் வழியாக செல்கின்றன. பாரம்பரிய மரக் கோயில் கட்டிடக்கலை காத்-குனி பாணியில் கட்டப்பட்டுள்ளது. [3] சில கல் உருவங்கள் குசான சகாப்தத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் (கி.பி. 1 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை). [4]

அரண்மனை[தொகு]

அரசன் மற்றும் இராணியின் அரண்மனை ஒப்பீட்டளவில் கோயிலுக்கு அருகில் உள்ள சமீபத்திய கட்டிடங்கள். அரண்மனைகள் பொதுவாக பார்வையாளர்களுக்காக திறக்கப்படுவதில்லை. இருப்பினும் தோட்டம் மற்றும் பழத்தோட்டத்திற்கு சில சமயம் அனுமதி உள்ளது. அரச குடும்பம் அங்கு வசிப்பதில்லை. ஆனால் அக்டோபரில் துர்கை பூஜை திருவிழாவின் போது எப்போதாவது வருகை தருகிறது.

போக்குவரத்து[தொகு]

சரகான் புது தில்லியிலிருந்து 564 கிலோமீட்டர் தொலைவிலும் சிம்லாவிலிருந்து 172 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கல்காவிற்கு தொடருந்து அல்லது சண்டிகருக்கு விமானம் மூலம் பயணம் செய்து, சாலை வழியாக சரகானுக்குச் செல்லலாம். சரகானை அடைய வாடகை வாகனங்களும் எடுக்கலாம். சண்டிகர், சிம்லா, இராம்பூர் மற்றும் ஜியோரி ஆகிய இடங்களிலிருந்தும் பேருந்து சேவைகள் உள்ளன. சிம்லாவிலிருந்து சரகானை அடைய சுமார் 6 முதல் 8 மணி நேரமும், சண்டிகரில் இருந்து 9 முதல் 11 மணிநேரமும் ஆகும். குளிர்காலத்தில் நர்கண்டாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலை இணைப்பு தற்காலிகமாக தடைபடுகிறது. கடுமையான பனிப்பொழிவின் போது பயன்படுத்தப்படும் நர்கண்டாவைத் தவிர்த்து சைன்ஜ் வழியாக மாற்றுப் பாதை உள்ளது.

குறிப்பிடத் தக்கவர்கள்[தொகு]

  • வீரபத்ர சிங் - அரசியல்வாதி
  • நிகாரிகா ஆச்சார்யா - தொலைக்காட்சி நிருபர்/பத்திரிக்கையாளர்

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சரகான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Sarahan Tourism info page from official website of Himachal Pradesh State Government of India". Archived from the original on 2017-01-02. பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
  2. Prem N. Nag, Dainik Jagran, 26 August 2007
  3. "Wooden Temples of Himachal Pradesh". Mian Goverdhan Singh. 1999. Indus Publishing Company, New Delhi, pp. 126.
  4. Buddhist Monasteries in Himachal Pradesh. O. C. Handa. 1987. Indus Publishing Company, New Delhi, pp. 55, 59.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரகான்&oldid=3583916" இலிருந்து மீள்விக்கப்பட்டது