உள்ளடக்கத்துக்குச் செல்

சரகதம் அப்பால நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரகதம் அப்பால நாயுடு
மீன்வளம் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர்
பதவியில்
1967–1971
தொகுதிபரவாடா
மாநிலங்கவை உறுப்பினர்
பதவியில்
1971–1984
முன்னையவர்சூர்யநாராயண மூர்த்தி
பின்னவர்பெ. அப்பால நரசிம்மம்
தொகுதிஅனகாபள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு06 நவம்பர் 1925
பெண்டுருத்தி, விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திர மாநிலம்
இறப்பு1996
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு

சரகதம் அப்பால நாயுடு (Saragadam Appala Naidu) (1925 - 1996) ஓர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுருத்தி கிராமத்தில் 6 நவம்பர் 1925 ஆம் ஆண்டு பிறந்தார்.[1]

அரசியல்

[தொகு]

இவர், 1967ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பரவாடா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2] காசு பிரம்மானந்த ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் 1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை மீன்வளம் மற்றும் துறைமுகங்கள் அமைச்சராகப் பதவி வகித்தார்.[3]

இவர் 1971, 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

நினைவு சின்னம்

[தொகு]

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெண்டுருத்தி சந்திப்பில் இவரது நினைவாக இவருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bruce Elliot Tapper, ed. (2009). Rivalry and Tribute : Society and Ritual in a Telugu Village in South India. Hindustan Publishing Corporation. p. 47. ISBN 9788170750031.
  2. Statistical Report of Andhra Pradesh Elections - 1967
  3. "COUNCIL OF MINISTERS" (PDF).
  4. "Anakapalli (Andhra Pradesh) Lok Sabha Election Results - Anakapalli Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in. Retrieved 2023-07-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரகதம்_அப்பால_நாயுடு&oldid=4525658" இலிருந்து மீள்விக்கப்பட்டது