சயீனைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சயீனைடீ
Micropogonias undulatus (line art).jpg
மைக்குரோபோகோனியாசு அண்டியூலேட்டசு (Micropogonias undulatus)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: சயீனைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

சயீனைடீ (Sciaenidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை துடிப்பது போன்ற அல்லது மேளம் அடிப்பது போன்ற ஒலியைத் தொடர்ச்சியாக எழுப்புகின்றன. இக் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 70 பேரினங்களில் ஏறத்தாழ 225 இனங்கள் உள்ளன. சயீனைடுகள் வால் வரையில் நீண்டு காணப்படும் நீளமான முதுகுத் துடுப்புக்களைக் கொண்டவை. இம்முதுகுத் துடுப்பு இடையில் ஆழமான வெட்டுக் கொண்டவையாக இரண்டு பிரிவாகத் தோன்றும். குதத் துடுப்புக்கள் இரண்டு இருக்கும்.

உலகம் முழுதும் நன்னீரிலும், உப்புநீரிலும் காணப்படும் இம் மீன்கள், நீரடித் தளத்தில் உள்ள முதுகெலும்பிலிகள், சிறிய மீன்கள் என்பவற்றை உண்டு வாழ்கின்றன. அடித்தளத்தில் வாழும் இம் மீன்கள் சிறியது முதல் நடுத்தர அளவானவை. இவை சிறப்பாக, கழிமுகப் பகுதிகள், குடாக்கள், சேற்றுப்பாங்கான ஆற்றங்கரைப் பகுதிகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சயீனைடீ&oldid=1352504" இருந்து மீள்விக்கப்பட்டது