உள்ளடக்கத்துக்குச் செல்

சயான் மலைத்தொடர்

ஆள்கூறுகள்: 53°15′07″N 94°58′28″E / 53.25194°N 94.97444°E / 53.25194; 94.97444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 உருசியா,  மங்கோலியா,  கசக்கஸ்தான் மற்றும்  சீனா மலைத்தொடர்கள்
தொங்கும் பாறையுடன், மேற்கத்திய சயான்

சயான் மலைத்தொடர் அல்லது சயன் மலைகள் (ஆங்கிலம்: Sayan Mountains; உருசியன்: Саяны Sayany; மொங்கோலியன்: Соёны нуруу, Soyonī nurú; மேலும், வான துருக்கியர்கள், ப்ளூ துருக்கியர்கள் அல்லது கோக் துருக்கியர்கள் காலத்தில் (period of the Göktürks[1]) கோக்மேன் மலைத்தொடர் (Kogmen Mountains) என அழைக்கப்பட்ட இம்மலைத் தொடர், வடக்கு ஆசியாவின் தெற்கு சைபீரியா, (குறிப்பாக துவா குடியரசு), மற்றும் வடக்கு மங்கோலியா உள்ளிட்ட அகண்டப் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதி, கடந்த காலத்தில், மங்கோலியா மற்றும் உருசியா இடையே எல்லைப் பணியாற்ற பயன்படுத்தப்பட்ட பகுதியாக இருந்துள்ளது.[2]

கிழக்கத்திய சயான் மலைத்தொடர் 92° கிழக்கு (92° E) 'எனிசேய் ஆற்றில் ( Yenisei River), இருந்து, பைக்கால் ஏரியின் தென்மேற்கு இறுதி வரை 92° கி (92° E) சுமார் 1,000 கிலோமீட்டர் (621 மைல்) நீண்டுள்ளது. மேற்கத்திய சயான் மலைத்தொடர் 96° கி, கிழக்கு சயான் நடுவில் 89° கி இருந்து 500 கிலோமீட்டர் (311 மைல்) நீட்சி, அல்த்தாய் மலைத்தொடரின் கிழக்கு தொடர்ச்சியியை ஏற்படுத்திக் கொள்கிறது.[3]

சயான் மலைத்தொடரில் உள்ள உயர்ந்த சிகரங்களும், மற்றும் குளிர்ந்த ஏரிகளும், தெற்கு, சைபீரியா பகுதியில் அமைந்துள்ள தென்மேற்கு துவாப் பகுதியில் துணை ஆறுகள் ஒன்றிணைந்து, உயர்வடைந்து, சைபீரியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான "எனிசேய்" ஆறு ( Yenisei River), வடக்கே 2000 மைல்கள் பாய்ந்து ஆர்க்டிக் பெருங்கடலை சென்றடைகிறது. மேலும் ஒரு பாதுகாக்கப்பட்ட, மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இப்பகுதி, 1944 இல் இருந்து சோவியத் ஒன்றியத்தால் பாதுகாப்பு செய்யப்பட்டு மூடப்பட்டடுள்ளது.[4]

நிலவியல்

[தொகு]

பொதுவாக சுமார் 2000 முதல் 2,700 மீட்டர் (8,858 அடி) உயரமுள்ள சயான் மலை, கருங்கல், கற்பலகை (Slate) மற்றும் உருமாறிய பாறை போன்ற பாறையியல் தொகுப்புகள் சுமார் 3,000 மீட்டர் (9,843 அடி) உயரத்தில் காணப்படுகிறது. சயான் மலைத்தொடரில் மிக உயர்ந்தப் பகுதியாக "முனாக் சரிதக்" (Mönkh Saridag) எனும் பகுதி உள்ளது, இதன் உயரம், சுமார் 3.492 மீட்டர்கள் (11,457 அடி) ஆகும்.[5] இம்மலை தொடரின் முக்கிய மலைக் கணவாய் கிடப்பு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 முதல் 2,300 மீட்டர் (7,546 அடி) உயரத்தில் அமைந்துள்ளது, உதாரணமாக, "முஸ்தாக் கணவாய்" (Mustagh Pass), "மங்கோலிய கணவாய்" (Mongol pass) 1,980 மீ (6,496 அடி), "டெங்ஹைழ் கணவாய்" (Tenghyz pass) 2,280 மீ (7,480 அடி), மற்றும் "ஒபோ-சரிம் கணவாய்" (Obo-sarym pass) 1,860 மீ (6,102 அடி) போன்றவைகள் உள்ளது.[6]

சயான் மலையின், 92° கி (92°E) அமைப்பின் (மேற்கத்திய சயான்) இடத்திலிருந்து, மேலேயுள்ள "எனிசேய்" ஆறு (Yenisei River) மூலம் துளையிட்டு, அதன் கிழக்கு முனையில் 106° அமைப்பின் இடத்தில் செலேங்கா ஆற்றில் (Selenga River) விழுந்து, "ஓர்கோன் பள்ளத்தாக்குக்கு (Orkhon Valley) மேலே வந்து முடிக்கிறது. மங்கோலியன் பீடபூமியில் இருந்து ஏறுமுகமாகவும், மற்றும் முழு மென்மையாகவும் காணப்படும் இது, ஆனால் சைபீரியாவில் உள்ள சமவெளிகளில் இருந்து, மிகவும் செங்குத்தாக உள்ளது, இருப்பினும் வரம்பில் ஒரு பரந்த திணைமண்டலம் மூலம் மூடி மறைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உருசியாவின் ஒரு நகரமான "உசின்சக்" (Usinsk), "ஓயா வரம்பு" (Oya range), கிழக்கு சயான் ஒரு பகுதியாக உள்ள "துங்கா வரம்பு" (Tunka range) மற்றும் சைபீரியா, மற்றும் உருசியாவின் ஒரு மலைத்தொடரான கிழக்கு சயான் மலைப் பகுதியாக உள்ள கிட்டோய் வரம்பு ( Kitoi ranges) ஆகும்.[7]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. Bartold, V. V. (1935) 12 Vorlesungen uber die Geschichte der Turken Mittelasiens Deutsche Gesellschaft für Islamkunde, Berlin, p.46, OCLC 3673071
  2. "Sayan Mountains". stampsy.com (ஆங்கிலம்) - August 7, 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-12.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Sayan Mountains". encyclopedia2.thefreedictionary.com (ஆங்கிலம்) -2003-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-15.
  4. "Siberia Sayan 2011". siberia-sayan-2011 (ஆங்கிலம்) - 2016. Archived from the original on 2016-10-30. பார்க்கப்பட்ட நாள் 2016-11-15. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  5. "Sayan Mountains". www.tititudorancea.net (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-16.
  6. "Sayan Mountains". www.worldlibrary.in (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-16.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "SAYAN MOUNTAINS". www.theodora.com (ஆங்கிலம்) - 1995-2011. பார்க்கப்பட்ட நாள் 2016-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயான்_மலைத்தொடர்&oldid=3833597" இலிருந்து மீள்விக்கப்பட்டது