சயனி ஏகாதசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதுர்மாஸ்ய காலத்தில் வருகின்ற ஏகாதசியை சயனி ஏகாதசி என்கின்றனர். [1] இந்த ஏகாதசி நாளில் தீப தானம் செய்வது சிறப்பாகும். சயனம் என்றால் உறங்குதல் திருமால் ஆடி பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரை உறங்குகிறார். அதனால் இக்காலத்தில் வருகின்ற ஏகாதசியை சயனி ஏகாதசி என்கின்றனர். இந்த நாள்களில் சன்னியாசிகள் ஒரே இடத்தில் தங்குகிறார்கள். இந்த நாளைப் பற்றி கார்த்திகை மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. பித்தளை, வெங்கலம், வெள்ளி ஆகிய தனிமங்களில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட விளக்கினை எடுத்து தட்டின் நடுவே வைக்க வேண்டும். அந்த விளக்கினை நெய்யால் நிரப்பி திரியிட்டு ஏற்ற வேண்டும். வேதம் கற்றவர்களுக்கு அதனை தானமாக தந்தால் ஞானமும், செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆதாரங்கள்[தொகு]

  1. தினமலர் பக்திமலர் 23.07.2015 பக்கம் 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயனி_ஏகாதசி&oldid=2097668" இலிருந்து மீள்விக்கப்பட்டது