உள்ளடக்கத்துக்குச் செல்

சயனிசுடெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சயனிசுடெசு
சயனிசுடெசு கேரூலியசு, யூரேசிய நீலப் பட்டாணிக் குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சயனிசுடெசு

காவுப், 1829
மாதிரி இனம்
சயனிசுடெசு கேரூலியசு
லின்னேயஸ், 1758
சிற்றினம்

ச. கேருலியசு
ச. தென்னேரிபே
ச. சயனசு

சயனிசுடெசு (Cyanistes) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த பட்டாணிக் குருவி பறவைகளின் பேரினமாகும். இந்தப் பேரினம் ஒரு காலத்தில் பாரசின் துணைப்பேரினமாக கருதப்பட்டது. 2005ஆம் ஆண்டில், பட்டாணிக் குருவி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மைட்டோகாண்ட்ரிய டி. என். ஏ. வரிசைகளின் ஆய்வின் அடிப்படையில் மூலக்கூறு தொகுதிவரலாற்று பகுப்பாய்வு பல துணைப்பேரினங்களை பேரின நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று முன்மொழிந்தது.[1] இந்த முன்மொழிவைப் பன்னாட்டுப் பறவையியலாளர்கள் சங்கம் மற்றும் இங்கிலாந்து பறவையியல் சங்கத்தினர் ஏற்றுக்கொண்டனர்.[2]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் உள்ளன.[3]

படம் விலங்கியல் பெயர் பொதுவான பெயர் விநியோகம்
சயனிசுடெசு கேரூலியசு யூரேசிய நீலப் பட்டாணிக் குருவி ஐரோப்பா
சயனிசுடெசு டெனெரிபே ஆப்பிரிக்க நீல நிறப் பட்டாணிக் குருவி வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் கேனரி தீவுகள்.
சயனிசுடெசு சயனசு அசூர் பட்டாணிக் குருவி உருசியா மற்றும் மத்திய ஆசியா மற்றும் வடமேற்கு சீனா, மஞ்சூரியா மற்றும் பாக்கித்தான்

சயனிசுடெசு என்ற பெயர் 1829-இல் செருமனிய இயற்கை ஆர்வலர் ஜேக்கப் காப் என்பவரால் ஒரு துணைப்பேரினமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வார்த்தையானது அடர்-நீலம் என்று பொருள்படும் பண்டைய கிரேக்கச் சொல்லான குவானோசு என்பதிலிருந்து வந்தது. இந்த மாதிரி சிற்றினம் 1842ஆம் ஆண்டில் ஜார்ஜ் கிரே என்பவரால் யூரேசிய நீலப் பட்டாணிக் குருவி என நியமிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, F.B.; Slikas, B.; Sheldon, F.H. (2005). "Phylogeny of titmice (Paridae): II. Species relationships based on sequences of the mitochondrial cytochrome-b gene". Auk 122: 121–143. doi:10.1642/0004-8038(2005)122[0121:POTPIS]2.0.CO;2. 
  2. Sangster, G.; Collinson, J.M.; Helbig, A.J.; Knox, A.J.; Parkin, D.T. (2005). "Taxonomic recommendations for British birds: third report". Ibis 147 (4): 821–826. doi:10.1111/j.1474-919x.2005.00483.x. 
  3. Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயனிசுடெசு&oldid=4014190" இலிருந்து மீள்விக்கப்பட்டது