சம அளவு ஈயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிர் மருத்துவத்தில் சம அளவு ஈயம் (lead equivalent அல்லது lead equivalence) என்பது ஒரு பொருள் கொடுக்கும் தடுப்பளவைப் போன்று, ஒரே கதிருக்கு அதே தடுப்பளவைக் கொடுக்கும் ஈயத்தின் கனவளவு ஆகும்.

கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு பற்றி ஆராயும் நிலையில், கதிர்களை ஏற்கும் பொருட்களை கதிர் மூலத்திற்கும் நபர்களுக்கும் நடுவே வைத்து, கதிர்வீச்சின் அளவைக் குறைக்க முடியும். பொதுவாக காங்கிரீட் சுவர், செங்கற் சுவர், மற்றும் பலபொருட்களும் பயன்படுகின்றன. கதிர் ஐசோடோப்பு சேமிப்புக் கலங்களும் இதுபோல் இரும்பு, உருக்கு, ஈயம் போன்ற உயர் அடர்த்தி உலோகங்களால் ஆனவையாக உள்ளன.

எடுத்துக்காட்டிற்காக, வெவ்வேறு தடிப்புள்ள (thickness) இரண்டு ஏற்பிகளின் வழியாக ஒரே ஆற்றலுள்ள மின்காந்தக்கதிர் சென்று வெளிப்படுவதாகக் கொள்வோம். வெளிப்படும் கதிர்களின் அளவும் செறிவும் சமமாக இருக்கின்றன. எனவே இரண்டிலும் ஏற்றுக்கொண்ட அளவுகளும் சமம் μ(1)L(1) = μ(2)L(2) என்று காட்ட.முடியும். இங்கு μ(1), μ(2) நேரியல் செறிவு குறைப்புக் குணகம் (Linear attenuation coefficient): L(1), L(2) என்பன முறையே ஊடகங்களின் தடிமனளவுகளாகும். எனவே சமன்பாட்டிலிருந்து L(1) =μ(2)L(2)|μ(1) ஆகும். இங்கு

L (1) -- ஈயத்தின் கனம்
L(2) -- இரண்டாவது காப்புப் பொருளின் கனம்
μ(1) -- ஈயத்தின் நேரியல் செறிவு குறைப்புக் குணகம்
μ(2) -- இரண்டாவது பொருளின் செறிவு குறைப்புக் குணகம்.

MV கதிர்களுக்கு சில பொருட்களுக்கு μ மதிப்பு கீழே உள்ளது.

பொருள் μ மதிப்பு (cm-1)
ஈயம் 0.772 cm-1
உருக்கின் 0.463
அலுமினியம் 0.165
காங்கிரீட் 0.170
செங்கல் 0.120

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம_அளவு_ஈயம்&oldid=1522534" இலிருந்து மீள்விக்கப்பட்டது