சம்மி பலூச்
சம்மி தீன் பலூச் | |
|---|---|
| سمی دین بلۏچ | |
| தாய்மொழியில் பெயர் | سمی دین بلۏچ |
| பிறப்பு | 30 மார்ச் 1998 (வயது 26) பலுச்சிசுத்தானம் |
| கல்வி | ஊடக அறிவியலில் இளங்கலைப் பட்டம் |
| பணி | மனித உரிமை ஆர்வலர் |
| அமைப்பு(கள்) | பலூச் யாக்ஜெஹ்தி குழு காணாமல் போன நபர்களுக்கான குரல் |
| அறியப்படுவது | மனித உரிமை செயல்பாடுகள் |
| தந்தை | தீன் முகம்மது பலூச்] |
| விருதுகள் | பிரண்ட்லைன் டெபென்டர்ஸ் விருது (2024) |
சம்மி தீன் பலூச் (Sammi Deen Baloch) பாக்கித்தானைச் சேர்ந்த ஒரு மனித உரிமை ஆர்வலரும் மற்றும் பலூச் யாக்ஜெஹ்தி குழுவின் தலைவரும் ஆவார்.[1] இவர் பலூச்சில் “காணாமல் போன நபர்களுக்கான குரல்” என்ற அரசு சார்பற்ற அமைப்பின் பொதுச் செயலாளராக பணியாற்றுகிறார்.[2][3] கடந்த 15 ஆண்டுகளில், தனது தந்தை தீன் முகமது பலூச் மற்றும் பலூசிஸ்தானிலிருந்து காணாமல் போன பிற நபர்களின் வழக்கு உட்பட பலூச் மக்களின் உரிமைகளுக்காக சம்மி ஒரு முக்கிய வழக்கறிஞராக இருந்து வருகிறார்.[4][5][6][7][8]
இவரது வாதம் பலூசிஸ்தானில் வலுக்கட்டாயமாக காணாமல் போவது, சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், அயர்லாந்தின் மனித உரிமைகள் பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அறக்கட்டளை விருது 2024 வழங்கப்பட்டது.[1]
ஜூலை 2024 இல், குவாடரில் நடந்த பலூச் ராஜி முச்சி போராட்டங்களின் போது சம்மி, சபிகா பலூச் மற்றும் பலூச் யாக்ஜெஹ்தி குழுவின் பிற உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்டனர். இதில் பாதுகாப்புப் படையினரால் மூன்று ஆர்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.[9]
செயல்பாடு
[தொகு]பலூசிஸ்தானில் சட்ட அமலாக்க முகமைகளால் வலுக்கட்டாயமாக காணாமல் போவதற்கு எதிராக வாதிடும் பணிகளில் சம்மி ஈடுபட்டுள்ளார்.[10] தனது தந்தை டாக்டர் தீன் முகமது மற்றும் காணாமல் போன மற்ற நபர்களை பாதுகாப்பாக விடுவிக்கக் கோரி 2014 இல் குவெட்டாவிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு நடந்து சென்றார்.[11] அப்போதிருந்து, பலூசிஸ்தானில் பாக்கித்தான் நிறுவனங்களால் வலுக்கட்டாயமாக காணாமல் போவது, சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பலூச் எதிர்ப்பு இயக்கத்தில் வரும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.[12][13][14][15][16]
மனித உரிமைகள் பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அறக்கட்டளை வழங்கும் 2024 ஆம் ஆண்டிற்கான ஆசிய பசிபிக் மனித உரிமைகள் விருதை சமி பலோச் பெற்றுள்ளார். விருது வழங்கும் விழா அயர்லாந்தின் டப்லினில் நடைபெற்றது.[17][18]
செப்டம்பர் 8,2024 அன்று, பாக்கித்தானில் இருந்து ஓமானுக்கு பயணம் செய்யவிருந்தபோது சம்மி நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. பாக்கித்தானிய அதிகாரிகளால் இவர் வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் வைக்கப்பட்டார். பட்டியலில் உள்ளவர்கள் பாக்கித்தானை விட்டு வெளியேறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. பலூச்ச் அரசு இவரது பயணக் கட்டுப்பாட்டுக்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் வழங்கவில்லை. மேலும் பலூசிஸ்தானில் இவரது மனித உரிமைகள் செயல்பாடு காரணமாக இவர் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Sammi Deen Baloch honoured with human rights award". The News International (in ஆங்கிலம்). 2024-05-31. Retrieved 2024-07-08.
- ↑ "More than 5,000 people are missing in Balochistan. I want my father back" (in en-GB). The Guardian. 2022-07-06. https://www.theguardian.com/global-development/2022/jul/06/pakistan-5000-people-disappeared-missing-balochistan.
- ↑ Baloch, Sammi Deen (2023-12-28). "From Balochistan to Islamabad: Why I have been marching since I was 12". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2024-07-08.
- ↑ Baloch, Islam Murad (2023-06-28). "Release Dr Deen Mohammad Baloch". Pressenza (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-07-17.
- ↑ Baloch, Sammi Deen (2023-12-28). "From Balochistan to Islamabad: Why I have been marching since I was 12". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2024-01-29.
- ↑ Dawn.com (2023-12-26). "Baloch protesters allege harassment by unknown individuals amid police presence". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2024-01-29.
- ↑ "In Balochistan, Families Demand Answers for Forced Disappearances". thediplomat.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-01-29.
- ↑ Pk, Voice (2023-06-28). "Dr Deen Muhammad Baloch: 14 years on and still missing". Voicepk.net (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-01-29.
- ↑ "Pakistan: Repeated punitive crackdowns on Baloch protests must end". Amnesty International (in ஆங்கிலம்). Retrieved 2024-08-04.
- ↑ "Pakistan: Marching for the thousands who disappeared in Balochistan" (in en-GB). https://www.bbc.com/news/world-asia-68125590.
- ↑ "The Women Fighting Enforced Disappearances in Pakistan". The Friday Times (in ஆங்கிலம்). 2023-03-08. Retrieved 2024-01-29.
- ↑ Guramani, Nadir (2023-12-28). "Baloch protesters give govt 7-day ultimatum to meet demands". Dawn. Retrieved 2024-01-29.
- ↑ Mitra, Esha (2024-01-21). "Pakistani Women Are Demanding Answers for Enforced Disappearances and Killings". Truthout. Retrieved 2024-01-29.
- ↑ ANI (2024-01-16). "Baloch activists meet with UN officials; discuss human rights crisis in Balochistan". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-01-29.
- ↑ "IHC stops authorities from forcing Baloch protesters to end Islamabad sit-in". www.geo.tv. Retrieved 2024-01-29.
- ↑ Baloch, Sammi Deen (2023-12-28). "From Balochistan to Islamabad: Why I have been marching since I was 12". Retrieved 2024-01-29.
- ↑ "Sammi Deen Baloch honoured with human rights award". The News International (in ஆங்கிலம்). 2024-05-31. Retrieved 2024-05-31.
- ↑ "Sammi Deen Baloch". Front Line Defenders (in ஆங்கிலம்). 2024-05-28. Retrieved 2024-05-31.
- ↑ News Desk (2024-09-08). "Sammi Deen Baloch Claims She Was Prevented From Travelling Abroad". thefridaytimes.com. Retrieved 2024-09-08.