சம்பூரா
சம்பூரா | |
|---|---|
| ஆள்கூறுகள்: 33°57′47″N 74°55′38″E / 33.962997°N 74.927238°E | |
| நாடு | |
| மாநிலம் | ஜம்மு & காஷ்மீர் |
| மாவட்டம் | புல்வாமா மாவட்டம் |
| ஏற்றம் | 1,590 m (5,220 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 4,889 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | உருது |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 192121 |
| வாகனப் பதிவு | JK13 |
சம்பூரா அல்லது சோம்பூர் (Samboora or Sombur), இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அமைந்த கிராம ஊராட்சி மற்றும் பாம்பூரா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.[1] சம்பூரா கிராமம், மாவட்டத் தலைமையிடமான புல்வாமாவிற்கு வடக்கே 20.கிலோமீட்டர் தொலைவிலும், சிறிநகருக்கு 15.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
புவியியல்
[தொகு]சம்பூரா கிராமம் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 5,164 அடி (1,574 மீட்டர்) உயரத்தில், ஜீலம் ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 760 குடியிருப்புகள் கொண்ட சம்பூரா கிராமத்தின் மக்கள் தொகை 4889 ஆகும். அதில் 2465 ஆண்கள் மற்றும் 2424 பெண்கள் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.25% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 983 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 64.87% ஆக உள்ளது.[2]
பொருளாதாரம்
[தொகு]சம்பூரா கிராமத்தின் முக்கியப் பொருளாதாரம் வேளாண்மைத் தொழில். குங்குமப்பூ வயல்கள் அதிகம் உள்ளது.
கல்வி
[தொகு]- அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, சம்பூரா
- அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, சம்பூரா
- குங்குமப்பூ பொதுப் பள்ளி, சம்பூரா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Samboora on Touristlink". touristlink.com. Retrieved 1 March 2021.
- ↑ Sambora Population - Pulwama, Jammu and Kashmir