உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பாகுளம் செயின்ட் மேரியின் பசிலிக்கா

ஆள்கூறுகள்: 9°24′33″N 76°24′40″E / 9.40917°N 76.41111°E / 9.40917; 76.41111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
St. Mary's Basilica (Valia Palli, Kerala)
சம்பாகுளம் செயின்ட் மேரிஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் (கல்லூர்காடு பள்ளி) / வலிய பள்ளி. தேவாலயத்தின் வடகிழக்கிலிருந்து காணும் தோற்றம்.
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா, கேரளம், ஆலப்புழா, சம்பாகுளம்
புவியியல் ஆள்கூறுகள்9°24′33″N 76°24′40″E / 9.40917°N 76.41111°E / 9.40917; 76.41111
சமயம்சிரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபை
மாவட்டம்ஆலப்புழா மாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகி.பி 427
நிலைமைனர் பசிலிக்கா
தலைமைVicar: Fr. Abraham Kadathukalam, Arch Bishop: Mar Joseph Perumthottam, Archdiocese: Syro-Malabar Catholic Archeparchy of Changanassery
இணையத்
தளம்
http://champakulampally.com/

சம்பாகுளம் கல்லூர்காடு மார்த் மரியம் (செயின்ட் மேரிஸ்) பசிலிக்கா ( மலையாளம் : ചമ്പക്കുളം വലിയ പള്ളി ) என்பது கேரளத்தின், ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு பண்டைய கிறிஸ்தவ தேவாலயம் ஆகும். இது சிரோ-மலபார் தேவாலயத்திற்கு சொந்தமானது. இது ஒரு ஃபோரேன் தேவாலயம், அதன் கீழ் பல திருச்சபைகள் உள்ளன.

வரலாறு

[தொகு]

சம்பாகுளம் கல்லூர்காடு மார்த் மரியம் பசிலிக்கா ( சம்பாகுளம் வலிய பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது) இந்தியாவின் பழமையான கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றாகும் [1] [2] மற்றும் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க சிரிய தேவாலயங்களின் தாய் தேவாலயமும் ஆகும். இது கி.பி 427 இல் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது, [3] தேவாலயம் பல முறை புனரமைக்கப்பட்டது. சம்பாகுளம் தேவாலயம் ஒரு காலத்தில் நிரனம் தேவாலயத்தின் கீழ் இருந்தது, இது அப்போஸ்தலன் புனித தோமாவால் நிறுவப்பட்டது. தேவாலயத்தைச் சுற்றியுள்ள பல கல்வெட்டுகள் தேவாலயத்தின் வரலாற்றைப் பற்றி குறிப்பிடுகின்றன.

சம்பாகுளம் தேவாலயத்தில் உள்ள திறந்தவெளி கற்ச்சிலுவை கி.பி 1151 ஆம் ஆண்டிலிருந்து அதன் பழமை குறித்து தெளிவான சான்றுகளைக் கொண்ட மிகப் பழமையான சிலுவைகளில் ஒன்றாகும். தேவாலயத்தைச் சுற்றி பல தொல்லியல் கலைப்பொருட்கள் காணப்படுகின்றன, அவை இதன் வரலாற்றைப் பறை சாற்றுகின்றன. சம்பக்குளம் தேவாலயம் மலங்கரா மரபுவழி சிரியக் குழுவுடன் மிகவும் நட்பான உறவைக் கொண்டிருந்தது மேலும் பதினெட்டாம் நூற்றாண்டில் பல கிறிஸ்தவ பணிகளில் முக்கிய பங்கு வகித்தது. கிழக்கு சிரியக் கத்தோலிக்கர்களின் வேதசாட்சிகளில் ஒருவரான இக்காக்கோ கதனர் இந்த திருச்சபையில் பிறந்தவர்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Champakulam Kalloorkkadu St Mary's Church- The Hidden Pearl in Nasrani History".
  2. "Ancient Churches". Archived from the original on 2012-01-25. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.
  3. "Ancient Churches with traditional dates of foundation & Stone Crosses of Kerala- Saint Thomas Cross, Nazraney Sthambams and other Persian Crosses".