சம்பராசூரன்
| சம்பராசூரன் | |
|---|---|
அரசவை உறுப்பினர்களுடன் சம்பராசூரன் உரையாடும் சித்திரம் | |
| வகை | அசுரன் |
| குழந்தைகள் | மயூராசூரன், சிரிங்ககேது, கும்பகேது |
| நூல்கள் | புராணங்கள் |
சம்பராசூரன் (Shambara (சமசுகிருதம்|शम्बर), பாகவத புராணத்தில், கிருஷ்ணர்-ருக்மணிக்கும் பிறந்த குழந்தையான பிரத்தியுமனனை, (மன்மதனின்) துவாரகயிலிருந்து சம்பராசூரன் கடத்திச் செல்கிறான்.[1] சம்பராசுரனின் சமையல்காரரும், தெய்வத்தின் உண்மையான வடிவமான மன்மதனின் துணைவியுமான மாயாவதியால் (ரதி) வளர்க்கப்பட்டார். இறுதியில் வளர்ந்த பிறகு, பிரதியும்னன் சம்பராசுரனைக் கொன்று, மாயாவதியுடன் துவாரகையில் உள்ள தனது குடும்பத்திற்குத் திரும்பினார்.
சம்பராசூரனுடன் போர்
[தொகு]பிரத்தியும்மனன் வளர்ந்த பிறகு, மாயாவதி அவனுக்கு குழந்தைப் பருவத்தில் பிரத்தியும்மனனை சம்பராசூரன் கடத்திச் சென்ற வரலாற்றை உரைக்கிறாள். மேலும் சம்பராசூரனை கொல்ல பிரத்தியும்மனன் கொல்ல அவதாரம் எடுத்துள்ளதையும் உரைத்தாள். மேலும் பிரத்தியும்மனனுக்கு சம்பராசூரனை கொல்வதற்கான மகாமாயா வித்தியா மந்திரத்தை உபதேசித்தாள். பிரதியும்னன் தனது வாளின் ஒரு அடியால் சம்பராசுரனின் தலையை துண்டித்தான். பின்னர் பிரதியும்னன் துவாரகைக்குச் சென்று, தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தான்.[2]
தொன்மவியல்
[தொகு]சிவபெருமானின் கோபத்தால் எரிக்கப்பட்ட மன்மதன், பின்னர் கிருஷ்ணரின் மகனாகப் பிரத்தியும்மனன் பிறந்தார். தன்னைக் கொல்வதற்காக அவதாரம் எடுத்துள்ள பிரத்தியும்மனனை சம்பராசூரன் கடத்திச் சென்று கடலில் எறிகிறார். ஒரு பெரிய மீன் குழந்தை பிரத்தியும்மனனை விழுங்கி விடுகிறது. மீனவர்கள் வலையில் சிக்கிய அதே மீனை சம்பராசூரனிடம் ஒப்படைத்தனர். சம்பராசூரன் அரண்மனையில் சமையற்காரியாக வேலைப் பார்த்த இரதி தேவியின் அம்சமாகப் பிறந்த மாயாவதி எனும் பெண், அம்மீனை அறுக்கையில் குழந்தை பிரத்தியும்மனன் வெளிப்பட்டது. அக்குழந்தை சாம்பலான தனது கணவன் மன்மதனின் அம்சமாக பிறந்ததை அறிந்து கொள்கிறாள். எனவே குழந்தை பிரத்தியும்மனனை பதின்ம பருவம் வளர்க்கிறாள்.[3]
இராமாயணத்தில்
[தொகு]முனொரு காலத்தில் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கைகேயி தேர் ஓட்ட தசரதன் போரில் சம்பாசூரனை வென்றார். கைகேயின் உதவிக்காக இரண்டு வரங்களை வழங்கினான் தசரதன். பிற்காலத்தில் அவ்வரங்களை பயன்படுத்திய கைகேயி, ஒரு வரத்தால் இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல பணித்தாள். மற்றொரு வரத்தால் தன் மகன் பரதன் அயோத்தியை ஆள வேண்டும் என்று பணித்தாள்.
விசுவாமித்திரருடன் வேள்வியைக் காக்கச் சென்ற இராமன் மற்றும் இலக்குவன், வேள்விக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பராசூரனின் மகனான சுபாகுவை இராமன் கொன்றான்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Krishna's Lineage: The Harivamsha of Vyasa's Mahabharata (in ஆங்கிலம்). Oxford University Press. 2019-07-02. p. 295. ISBN 978-0-19-027920-2.
- ↑ www.wisdomlib.org (2014-08-30). "Sambara killed by Pradyumna [Chapter XXVII]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-08-03.
- ↑ "Srimad Bhagavatam: Canto 10 - Chapter 55".