சம்பந்தபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சம்பந்தபுரம் (Sambandhapuram) என்பது தமிழ் நாட்டில் துய்யம்பூந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பசுமை நிறைந்த அழகிய ஊர்.இங்கு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் பாசத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.

சம்பந்தபுரத்தில் ஓர் இயற்கைக் காட்சி

இங்கு வேளாண்மை முக்கிய தொழில் ஆகும். இவ்வூர் கீழ்பவானி அணை பாசனத்திட்டத்தின் மூலம் நீர் பாசன வசதி பெறுகிறது. இவ்வூர் ஈரோட்டில் இருந்து தெற்கே 15 கிமீ தொலைவில் (ஈரோடு பழனி நேர்வழி நெடுஞ்சாலை) அவல்பூந்துறைக்கு மேற்கே 1 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகே அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைகூடம் அமைந்து உள்ளது. இது கொப்பரை தேங்காய் விற்பனைக்கு தமிழக அளவில் பெயர் பெற்ற சந்தைக்கூடம் ஆகும்.

சம்பந்தபுரம் அஞ்சல் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை வழி, துய்யம்பூந்துறை அஞ்சல் நிலையம் வழி வருகின்றது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 638115. தொலைபேசி குறியீடு 0424.

  • மாவட்டம் : ஈரோடு
  • சட்டமன்றத் தொகுதி: மொடக்குறிச்சி.
  • நாடாளுமன்றத் தொகுதி: ஈரோடு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பந்தபுரம்&oldid=348216" இருந்து மீள்விக்கப்பட்டது