சம்பத் பால் தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்பத் பால் (Sampat Pal) வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த இந்திய சமூக ஆர்வலர் ஆவார்.[1] "குலாபி கேங்" என்பதின் நிறுவனர், உத்தரப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு, பெண்களின் நலன்கள் மற்றும் அதிகாரமளிப்பதற்கான பணிகளை செய்து வந்தது.[2][3] அவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளிவந்த "பிக் பாஸ் 6" என்ற ஒரு "ரியாலிட்" நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[சான்று தேவை]

பின்னணி[தொகு]

சம்பத் பால் நிறுவிய "குலாபி கேங்" என்ற நிறுவனம் பெண்களின் உரிமைகளை அதிகரிக்கச் செய்தது.[4] உத்தரப் பிரதேசத்தில் பல மாவட்டங்களில் 270,000 உறுப்பினர்கள் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பெண்கள் இயக்கமாக இது உருவாக்கப்பட்டது. வன்முறைகளுக்கு எஹிராக போராடும் போது இவர்கள் ரோஜா வண்ணம் (குலாபி) இளஞ்சிவப்பு புடவைகள் அணிந்து கொண்டும் மற்றும் மூங்கில் குச்சிகளை ஏந்திக் கொண்டும் போராடுகிறார்கள்.[5][6] இவரின் சுயசரிதையில் பிரெஞ்ச் பத்திரிகையாளர் அன்னே பெர்த்தோட் உடனான தனது கூட்டுழைப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய ஒலிப்பரப்பு கழகத்தின் அறிக்கையின்படி, "பண்டா" சாதி வேறுபாடுகள் நிறைந்த , நிலப்பிரபுத்துவ மற்றும் ஆண் ஆதிக்க சமூகமாகும். வரதட்சணை கொடுமைகள் மற்றும் உள்ளூர் பாலியல் வன்முறைகளும் சாதாராணமாக நடைபெறக்கூடிய பகுதியாகும். வறுமை, பாகுபாடு மற்றும் பேரினவாதத்தின் நிலப்பரப்பில் ஒரு பெண் விழிப்புடன் இருக்க இக்குழு உருவானது ஆச்சரியம் இல்லை என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.[7]

2014 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி, நிதி சார்பான தவறான குற்றச்சாட்டுக்களின் போது அவரது குழுவினரின் நலன்களை முன்னெடுத்து "குலாபி கேங்'கின் தலைமை பொறுப்பை விட்டு பாலி வெளியேறினார்.[4] ஆகஸ்ட் 31, 2017 அன்று, "ரங்கபாயனா" என்றழைக்கப்படும் ஒரு நாடக நிறுவனம், "ராஜ்குரு ஹோஸகோட்டே" இயக்கத்தில் சம்பத் பாலின் வாழ்க்கை மற்றும் "குலாபி கேங்'கின் நடைமுறையை தழுவி ஒரு நாடகம் இயற்றினார்கள்.[சான்று தேவை]

குறிப்புகள்[தொகு]

  1. Krishna, Geetanjali (5 June 2010). "The power of pink". பிசினஸ் ஸ்டாண்டர்ட். http://www.business-standard.com/india/ne0.0ws/geetanjali-krishnapowerpink/397107/. பார்த்த நாள்: 20 July 2010. 
  2. "Sampat Pal: All you need to know about the Gulabi Gang leader". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2014-03-07. Archived from the original on 2014-09-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Fontanella-Khan, Amana (19 July 2010). "Wear a Pink Sari and Carry a Big Stick: The women's gangs of India". Slate magazine. http://www.slate.com/articles/double_x/doublex/2010/07/wear_a_pink_sari_and_carry_a_big_stick.html. பார்த்த நாள்: 7 March 2012. 
  4. 4.0 4.1 "Sampat Pal Ousted from Gulabi Gang". The Times of India. 4 March 2014. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Sampat-Pal-ousted-from-Gulabi-Gang/articleshow/31365684.cms. 
  5. Prasad, Raekha (15 February 2008). "Banda sisters". தி கார்டியன். https://www.theguardian.com/lifeandstyle/2008/feb/15/women.india. பார்த்த நாள்: 20 July 2010. 
  6. "Sampat Pal: All you need to know about the Gulabi Gang leader". Hindustan Times. 7 March 2014 இம் மூலத்தில் இருந்து 2014-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140914115244/http://www.hindustantimes.com/india-news/all-you-need-to-know-about-gulaabi-gang-s-sampat-pal/article1-1191985.aspx. பார்த்த நாள்: 2014-10-22. 
  7. Biswas, Soutik (26 November 2007). "India's "pink" vigilante women". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7068875.stm. பார்த்த நாள்: 22 May 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பத்_பால்_தேவி&oldid=3924936" இலிருந்து மீள்விக்கப்பட்டது