சம்பத் சந்திர சுவைன்
சம்பத் சந்திர சுவைன் | |
|---|---|
சுவைன் 2024-ல் | |
| தொழில்துறை, திறன் மேம்பாடு, தொழில்நுட்பத் துறை அமைச்சர், ஒடிசா அரசு | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 12 சூன் 2024 | |
| சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | சாம்பித் ரவுத்ரி |
| தொகுதி | பராதீப் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பெற்றோர் | தசாரத் நாயக் |
| தொழில் | அரசில்வாதி, விவசாயம் |
சம்பத் சந்திர சுவைன் (Sampad Chandra Swain)(பிறப்பு 1986) என்பவர் ஒடிசாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர், 2024ஆம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தில் தொழில்துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான மாநில அமைச்சராக (சுயாதீன பொறுப்பு) ஆனார். இவர் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் பரதீப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]சுவைன் ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள இரங்கியாகடாவைச் சேர்ந்தவர்.[3] 2009ஆம் ஆண்டில் மேக்னசு வணிகப் பள்ளியில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]சூன் 12, 2024 அன்று, புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் முதலமைச்சர் மோகன் சரண் மாச்சியுடன் இவர் பதவியேற்றார். ஆளுநர் ரகுபர் தாசு அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் சா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக ஆளும் 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.[4][5][6] 2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாரதீப் சட்டமன்றத் தொகுதியில் பாஜகவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார். இவர் 84,518 வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான பிஜு ஜனதா தளத்தின் கீதாஞ்சலி ரௌத்ரேவை 15,787 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முன்னதாக, 2019 ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் சம்பித் ரௌத்ரே மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் அரிந்தம் சர்க்கேல் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Service, Express News (2024-06-13). "Paradip MLA's elevation as minister hailed". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-10-13.
- 1 2 "My Neta Profile" (in en-IN). My Neta. 15 June 2024. https://myneta.info/Odisha2024/candidate.php?candidate_id=1151.
- ↑ Service, Express News (2024-06-13). "Paradip MLA's elevation as minister hailed". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-10-13.
- ↑ "Highlights: BJP Tribal Leader, 4-Time MLA Mohan Majhi Sworn In As Odisha Chief Minister". NDTV.com. Retrieved 13 June 2024.
- ↑ Barik, Satyasundar (12 June 2024). "Mohan Charan Majhi sworn in as Odisha’s first BJP Chief Minister" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/odisha/mohan-charan-majhi-sworn-in-as-odishas-first-bjp-chief-minister/article68281205.ece.
- ↑ "Odisha Cabinet portfolios: CM Mohan Charan Majhi keeps Home" (in en-IN). India News. 13 June 2024. https://www.indiatvnews.com/news/india/odisha-cabinet-portfolios-cm-mohan-charan-majhi-keeps-home-ministry-kanak-vardhan-singh-agriculture-pravati-parida-women-child-development-finance-2024-06-15-937131.
- ↑ "Paradeep Assembly Election Results 2024: Paradeep Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-10-13.