உள்ளடக்கத்துக்குச் செல்

சம்சாரம் (1951 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்சாரம்
சம்சாரம் தமிழ்த் திரைப்பட விளம்பரம்
இயக்கம்சந்துரு
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
கதைகி. ரா.
மூலக்கதைசம்சாரம் (1950 தெலுங்குத் திரைப்படம்)
இசைஏமனி சங்கர சாஸ்திரி
எம். டி. பார்த்தசாரதி
நடிப்புஎம். கே. ராதா
புஷ்பவல்லி
குமாரி வனஜா
சிறீராம்
சுந்தரிபாய்
டி. ஆர். இராமச்சந்திரன்
டி. பாலசுப்பிரமணியம்
ஆர். பாலசுப்பிரமணியம்
மாஸ்டர் சேது
கே. என். கமலம்
கமலவேணி அம்மாள்
பாடலாசிரியர்கொத்தமங்கலம் சுப்பு
ஒளிப்பதிவுபி. எல்லப்பா
படத்தொகுப்புஎம். உமாநாத் ராவ்
கலையகம்ஜெமினி ஸ்டூடியோஸ்
வெளியீடு19.10.1951[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
இந்தி

சம்சாரம் 1951-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சந்துருவின் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது. தெலுங்கில் 1950 இல் இதே தலைப்பில் வெளியான திரைப்படத்தையே தமிழில் ஜெமினி ஸ்டூடியோஸ் எஸ். எஸ். வாசன் தயாரித்தார். ஒரே சமயத்தில் இது சன்சார் என்ற பெயரில் இந்தியிலும்[2] சம்சாரம் என்ற பெயரில் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. இந்தித் திரைப்படத்தை எஸ். எஸ். வாசன் இயக்க, தமிழ்ப் படத்தை சந்துரு இயக்கினார். தமிழ்த் திரைப்படத்தில் எம். கே. ராதா, புஷ்பவல்லி, டி. ஆர். இராமச்சந்திரன், ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். சம்சாரம் 1951 அக்டோபர் 19 (தீபாவளி அன்று) அன்று வெளியானது.[3]

கதைக்களம்

[தொகு]

மனைவி இரண்டு குழந்தைகள் என ஒரு அலுவலக எழுத்தர் வாழ்ந்துவருகிறார். அவரது சூழ்ச்சி மிக்க தாயும், சகோதரியும் வீட்டிற்கு வந்த பிறகு அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அச்சுறுத்ல் ஏற்படுகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு, எழுத்தர் தன் குடும்பத்தைவிட்டு காணாமல் போய்விடுகிறார். பின்னர் எழுத்தரின் சகோதரர் அவர்களைக் காப்பாற்ற வருகிறார். இந்த நிலையில் கெடுமதியாளர்கள் எழுத்தரின் சகோதரனுக்கும், மனைவிக்கும் இடையே தகாத உறவு உள்ளதாக கதைக்கட்டி விடுகின்றனர். இதனால் விரக்தியடைந்த எழுத்தரின் மனைவி தன் இரண்டு குழந்தைகளையும் தெருக்ககளில் பிச்சை எடுக்க அனுப்புகிறாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு குழந்தைகளில் மூத்தவர், ஒரு ஆலையில் வேலைப் பார்ப்பவராக உள்ளார். ஒரு சமயம் தாடி வைத்த ஒரு பிச்சைக்காரனை சந்திக்கிறார். அவர் உண்மையில் அவரது தந்தை என்று அவருக்குத் தெரியாது. அவர் தன் தந்தைக்கு ஆலையில் வேலை வாங்கித் தருகிறார், பின்னர் குடும்பம் மீண்டும் ஒன்றிணைகிறது.

நடிப்பு

[தொகு]
நடிகர்கள் (தமிழ்) நடிகர்கள் (இந்தி) பாத்திரம் (தமிழ்) பாத்திரம் (இந்தி)
புஷ்பவல்லி மஞ்சுளா லட்சுமி
எம். கே. ராதா கோபு நாராயண்
வனஜா கமலா
Sriram ஸ்வராஜ் வேணு மதன்
எம். எஸ். சுந்தரி பாய் குலாப் காமாட்சி கங்கா
டி. ஆர். இராமச்சந்திரன் ஆகா சீதாராம்
கமலவேணி அம்மாள் மோகனா வெங்கம்மா ஜம்னா
டி. பாலசுப்பிரமணியம் ஜே. எஸ். காஷ்யப் கனகசபாபதி ஜுகல்ஜி சேத்
ஆர். பாலசுப்பிரமணியம் டேவிட் மருத்துவர்
கே. என். கமலம் மீரா செல்லம்மா சரசுவதி
சேது கசம் பாலு (வளர்ந்த பிறகு) கோபி (வளர்ந்த பிறகு)
அனில் குமார் பாலு (குழந்தை) கோபி (குழந்தை)
கிருஷ்ணவேணி சரோஜா (வளர்ந்த பிறகு) ரூபா (வளர்ந்த பிறகு)
ரத்னபாபா சரோஜா (குழந்தை) ரூபா (குழந்தை)
விஜய் மோகன்
ரங்கசாமி மஞ்சுளாவின் தந்தை லட்சுமியின் தந்தை
ராமகிருஷ்ண ராவ் கொண்டல் ராவ் போபட் லால்
ஜி. வி. சர்மா ராமையா
வெங்கட் கமலாவின் உறவினர் ஏ. எல். காம்
சதாசிவ ராவ் அலுவலக மேலாளர்
ஜி. எஸ். பிந்துமாதவன் துணை ஆய்வாளர்
முகர்ஜி ராஜ்குமார்
ஈஸ்வர்லால் சேத்
விஜய ராவ் சுப்பண்ணா தினு
சக்குபாய் பாலாமணி நாகம்மா தயாவதி
ராம்குமார் பி. எஸ். கல்லா மகிழுந்து உரிமையாளர்

தயாரிப்பு

[தொகு]

ஜெமினி ஸ்டுடியோசின் உரிமையாளர் எஸ். எஸ். வாசன் தன் ஊழியர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கு சம்சாரம் என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் திரையிட்டு காட்டினார். படத்தைப் பார்த்த அவர்கள் உருகி அழுதனர். இதையடுத்து அவர் அப்படத்தின் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் மறுஆக்கம் செய்யும் உரிமையை வாங்கினார். தமிழ்ப் பதிப்புக்கு அதன் தெலுங்கு படத்தின் தலைப்பே இடப்பட்டது. இந்தி பதிப்பிற்கு சன்சார் என்று பெயரிடப்பட்டது. இரண்டு பதிப்புகளின் பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன; ஜெமினியின் தலைமைப் படத்தொகுப்பாளரான சந்துரு தமிழ் பதிப்பை இயக்கினார். அன்றைய தென்னிந்திய நடிகர்களுக்கு சரளமாக இந்தி பேசத் தெரியாததால், வாசன் தான் இயக்கிய சன்சார் படத்திற்கு தென்னிந்திய நடிகர்களின் குரல்களுக்கு பின்னணிக் குரல் கலைஞர்களைப் பயன்படுதிக் கொண்டார்.[2][4][5]

இசை

[தொகு]

இப்படத்திற்கு புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர் சங்கர சாஸ்திரி இசையமைத்தார். அவரது பணியை எம். டி. பார்த்தசாரதி மேற்பார்வை செய்தார். பாடல் வரிகளை கொத்தமங்கலம் சுப்பு எழுதினார். இப்படத்தின் வழியாக ஏ. எம். ராஜா பாடகராக அறிமுகமானார். அவர் பாடிய "சம்சாரம்... சம்சாரம்..." பாடல் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.[2]

பாடல் பாடகர்
"ஆராரோ ஆராரோ அருமை குமாரா" பி. லீலா
"மாநிலத்தில் விதியை வென்ற" ஏ. எம். ராஜா
"சம்சாரம் சம்சாரம்" ஏ. எம். ராஜா
"கட கட லொட லொட வண்டி" ஏ. எம். ராஜா, ஜிக்கி
"எனது மனம் கனவிலும்" ஜிக்கி
"அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே" ஜிக்கி, சரோஜினி
"ஏழை எங்கு செல்வேன்" பி. லீலா
"அவர் மெல்ல மெல்ல" ஜிக்கி

வரவேற்பு

[தொகு]

சம்சாரம், சன்சார் ஆகிய இரண்டு பதிப்புகளும் 1951 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றியடைந்தன.[5] வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, இதன் வெற்றிக்கு அதன் "உணர்ச்சிகரமான வலுவான கதைக்களம்", ராதா, புஷ்பவல்லி, ஸ்ரீராம், வனஜா, சுந்தரி பாய், ராமச்சந்திரன் ஆகியோரின் நடிப்பு காரணமாக இருந்தது. இருப்பினும், பத்திரிகையாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி தனது பத்திரிகையான கல்கியில் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை எழுதினார். அதில் அவர் "அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே" பாடலை விமர்சித்து "எந்த்த் தாயும் தன் குழந்தைகளை, எந்த நிலையிலும் பிச்சை எடுக்க அனுமதிக்கமாட்டார்" என்று கடுமையாக விமர்ச்சித்தார்.[2] ஜப்பானில், இப்படம் சச் இஸ் லைஃப் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.[6] சம்சாரத்தின் கதையைத் தழுவி துணையிருப்பாள் மீனாட்சி (1977) என்ற படம் தமிழில் எடுக்கபட்டது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23-10-2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 6-01-2017. {{cite book}}: Check date values in: |date= and |archivedate= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 Randor Guy (6 December 2014). "Samsaram 1951". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170103101240/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-samsaram-1951/article6668028.ece. 
  3. "1951 – சம்சாரம் – ஜெமினி சம்சாரம் (தெ) சன்சார்(இ)". Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 6 January 2017. Retrieved 6 January 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 231. ISBN 0-19-563579-5.
  5. 5.0 5.1 Ashokamitran 2016, ப. 41.
  6. Ashokamitran 2016, ப. 69–70.
  7. "சிவகுமார் 101 | 81–90". Kalki. 9 September 1979. pp. 60–61. Archived from the original on 17 March 2023. Retrieved 16 March 2023 – via இணைய ஆவணகம்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சாரம்_(1951_திரைப்படம்)&oldid=4370167" இலிருந்து மீள்விக்கப்பட்டது