சமூக நீதி கண்காணிப்புக் குழு (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 23 அக்டோபர் 2021 அன்று சுப. வீரபாண்டியன் தலைமையில் சமூக நீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தார். இதன் நோக்கம் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு பதவி நியமனங்கள், பதவி உயர்வுகள், மகளிர் உரிமை, பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக முழுமையாக நடைமுறைப்படுவதை கண்காணித்து தமிழ்நாடு அரசுக்கு தேவையான பரிந்துரைகள் செய்யும்.[1][2]

குழுவின் தலவைர் & உறுப்பினர்கள்[தொகு]

  1. சுப. வீரபாண்டியன் - குழுத்தலைவர் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
  2. முதன்மைச் செயலாளர் - உறுப்பினர் (தமிழ்நாடு அரசு சமூக சீர்த்திருத்தத் துறை)
  3. முனைவர் கே. தனவேல் - உறுப்பினர் (முன்னாள் ஐ ஏ எஸ்)
  4. முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் - உறுப்பினர்
  5. மனுஷ்ய புத்திரன் (இயற்பெயர்:எஸ். அப்துல் ஹமீத்) - உறுப்பினர்
  6. ஏ. ஜெய்சன் - உறுப்பினர் (பட்டியல் சமூகத்தினர் தொடர்பாக சட்ட அறிஞர்)
  7. பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன்
  8. கோ. கருணாநிதி - உறுப்பினர் (பொதுச் செயலர், அனைத்திந்திய பிற்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பு)
  9. மருத்துவர். சாந்தி ரவீந்திரநாத் - உறுப்பினர் [3][4]

மேற்கோள்கள்[தொகு]