உள்ளடக்கத்துக்குச் செல்

சமூக இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமூக இயக்கம் (Social movement) அல்லது மக்கள் இயக்கம் (popular movement) என்பது ஒரு பெரிய குழு மக்களால், ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக, தளர்வாகவோ, கவனமாகவோ ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்; அந்த இலக்கு பொதுவாக ஒரு சமூக அல்லது அரசியல் சார்ந்ததாக இருக்கும்.[1][2] இது ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவோ, சமூகத்தில் ஏற்கனவே உள்ள மாற்றத்தை எதிர்ப்பதற்காகவோ அல்லது அதை மாற்றுவதற்காகவோ இருக்கலாம். இது ஒரு வகை குழுச் செயல்பாடு ஆகும்.

செயல் வகைமை

[தொகு]

இதில் தனிநபர்கள், அமைப்புகள் அல்லது இரண்டுமே ஈடுபடலாம். சமூக இயக்கங்கள், "ஒடுக்கப்பட்ட மக்களைத் திறம்பட சவால்களை எதிர்கொள்ளவும், அதிக சக்திவாய்ந்த மற்றும் சலுகை பெற்ற உயரடுக்குகளை எதிர்க்கவும், அதிகாரம் அளிக்கக்கூடிய நிறுவனக் கட்டமைப்புகளும், உத்திகளும்" என்று விவரிக்கப்பட்டுள்ளன.

அவை நாடுகளுக்குள் அடித்தள மட்டத்திலிருந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முறையைக் குறிக்கின்றன. மறுபுறம், சில சமூக இயக்கங்கள், சமூகத்தை அதிக சமத்துவமுள்ளதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக ஏற்கனவே உள்ள அதிகார உறவுகளைப் பராமரிப்பதையோ அல்லது பெருக்குவதையோ நோக்கமாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டக, அறிஞர்கள் பாசிசத்தையும், சமூக இயக்கம் என்றே விவரிக்கின்றனர்.[3]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Scott, John; Marshall, Gordon (2009), "Social movements", A Dictionary of Sociology (in ஆங்கிலம்), Oxford University Press, doi:10.1093/acref/9780199533008.001.0001, ISBN 978-0-19-953300-8, retrieved 2020-03-06
  2. "social movement | Definition of social movement by Webster's Online Dictionary". www.webster-dictionary.org. Retrieved 2020-03-06.
  3. Berger, Stefan; Nehring, Holger. "The History of Social Movements in Global Perspective" (PDF). ndl.ethernet.edu.et.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_இயக்கம்&oldid=4457719" இலிருந்து மீள்விக்கப்பட்டது