சமூகவலை பக்கக்குறிப்பு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சமூகவலை பக்கக்குறிப்பு (Social Bookmarking) என்பது, வலைத்தளங்களின் பக்கத்தை சேமிக்க அல்லது மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ள செய்யப்படும் இணையப் பயன்பாட்டு முறையாகும். இவை பொதுவாக ஒரு இணையப்பக்கத்தின் முகவரி, அதைப்பற்றிய சிறுகுறிப்பு, அதன் வகைப்பிரிவு ஆகிய தகவல்களைக் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் ஒருவர் தனக்குப் பிடித்த இணையப் பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ளமுடிகிறது, மற்றவரின் பகிர்வை இவரும் பயன்படுத்தமுடிகிறது.
சில பக்கக்குறிப்பு சேவை வழங்கும் இணையதளங்கள் தானாக திரட்டிக் கொள்பவைகளாகவும், பயனர் சமர்பிக்கும்படியாகவும் இருக்கும் மேலும் சில தளங்களில் ஓட்டு முறை மூலம் பிரபலாமான பக்கக்குறிப்புகள் தரவரிசைப்படுத்தப்படும்.