சமூகத் தனிமை
சமூகத் தனிமை என்பது சமூகத்துடன் ஒரு தொடர்பற்ற நிலையைக் குறிக்கும். இது உளவியல் ரீதியான மனச்சிக்கல் ஆகும். இது தற்காலிகமாக வரக்கூடிய இயல்பான தனிமையுணர்வு போன்றது அல்ல. உண்மையான சமூகத் தனிமை என்பது நீண்ட காலத்திற்கு நீடிக்கக் கூடியது. இதனை உடைய மனிதருக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.
இது நாள் தோறும் தொடர்ந்தால் ஏற்படுத்தும் விளைவுகள்:
- பல நாட்களாக வீட்டினுள்ளேயே இருத்தல்.
- நண்பர்களுடன் அதிகம் பேசாதிருத்தல்
- மக்களுடன் தொடர்பாடலை முடிந்தளவு குறைத்துக் கொள்ளுதல்
இது கவலைமிகுந்த மனநிலைக்கு வழிவகுக்கும், ஏனெனில், தங்களுக்கு இது சரி, தவறு என்பதை உணர்த்த யாரும் இருப்பதில்லை.
பின்னணி
[தொகு]உளவியல் காரணமாகவும், மன நிலை மாற்றம் காரணமாகவும் சமூகத் தனிமை ஏற்படுகிறது. ஒரு மனிதனிடத்தில் இக்குணம் (சிறுவயது முதல் இளைய பருவம் வரை) தொடர்ந்து நீடித்தால், வாழ்வில் தனிமையையே விரும்புவார்கள். தற்காலத்தில் உள்ள இணைய வசதி, அலைபேசிகள், சமூக வலைத்தளங்கள் போன்றவை சமூகத்தனிமைக்கு காரணமா என்று சமூகவியலாளர்கள் ஆராய்கின்றனர்.
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
[தொகு]இப் பிரச்சனை 15 வயது தொடக்கம் 30 வயதுக்குள் உட்பட்ட நபர்களுக்கே அதிகபட்சமாக ஏற்படுகிறது. மாணவர்கள் பள்ளி செல்வதில் சிரமம் எதிர்கொள்கின்றன. பல மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்க்கை வாழ்கின்றனர். பல தற்கொலை நேர்ந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]