உள்ளடக்கத்துக்குச் செல்

சமுதாய தொழில்முனைவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமுதாய தொழில்முனைவகம் (social enterprise) ஒரு புதிய வியாபார சமுதாய சேவை நிறுவன மாதிரியாகும். ஒரு குறிப்பிட்ட சமுதாய சேவையை மையப்படுத்தியும் பொருளாதார தளத்தில் தன்னிறைவுடனும் தாங்குதிறனுடனும் இயங்கும் அல்லது அப்படி இயங்க முயற்சிக்கும் தாபனங்கள் சமுதாய தொழில்முனைவகங்கள் ஆகும். இவை இரு குறிக்கோள்களை கொண்டு இயங்குகின்றன, ஒன்று சமூக சேவை, மற்றது அச்சமூக சேவைக்கு உதவும் ஒரு வியாபார உத்தி அல்லது சேவை.


சமுதாய தொழில்முனைவகங்கள் இலாபத்தையே ஒரு குறியாக கொண்டு இயங்கும் முதலாளித்துவ தாபனங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். முதலாளித்துவ வியாபர தாபனங்கள் என்ன சேவை, என்ன பொருட்கள் விற்கப்படுகின்றன எனபதைவிட இலாபம் ஈட்டுவதையே பிரதான இலக்காக கொண்டு இயங்குகின்றன. மாற்றாக சமுதாய தொழில்முனைவகங்கள் தெளிவான சமூக சேவையை முன்நிறுத்தியும், அதற்கு உதவும் அதனோடு சார்ந்த வியாபார சேவையை பக்கபலனாகவும் கொண்டு இயங்குகின்றன.


ஒரு நிலையில் சமுதாய தொழில்முனைவகம் முதலாளித்துவ வியாபர முறைமைக்கும் சமூக சேவை நிறுவனத்துக்குமான ஒரு கூட்டு கட்டமைப்பு எனலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுதாய_தொழில்முனைவகம்&oldid=3762709" இலிருந்து மீள்விக்கப்பட்டது