சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி என்பது தற்போது உள்ள நாகரிகம் அடைய பல வருடங்கள் ஆகியுள்ளன.சமுதாயம் என்பது ஆரம்பித்தில் இல்லை .மனிதன்' கூடி வாழ ஆரம்பித்த பிறகே சமுதாயம் உருவானது. தான்,தனக்கு என்ற நிலை மாறி தானும் தன்னை சார்ந்தோரும் என்ற நிலை மாறியது.பின் பொது நலம்,விதிமுறை, கட்டுப்பாடு, பொதுமறை உருவாகியது.

பரிணாம முறை வளர்ச்சி[தொகு]

  • நாடோடி நிலை
  • வேட்டையாடி திரிந்த நிலை
  • மின் பிடிக்க கற்றுக் கொண்ட நிலை
  • உழவுத் தொழில் நிலை
  • குறுநில வேந்தர் நிலை
  • வாணிக நிலை
  • தொழிற்சாலை நிலை
  • நவீன கால நிலை

நாடோடி நிலை[தொகு]

நாடோடி நிலையில் மனிதன் ஒரிடத்தில் இல்லாமல் மரக்கிளைகளில் வாழ்ந்தான்.குடும்பம் இன்றி இலை,காய்,பழம்,உண்டு தன்னிச்சையாக வாழ்ந்தான்.

வேட்டையாடித் திரிந்த நிலை[தொகு]

வேட்டையாடித் திரிந்த நிலை முதன் முதலாக இறைச்சி உண்ண ஆரம்பித்தான்.இறைச்சியை பச்சையாக உண்டான். கால இறுதியில் நெருப்பின் பயன் அறிந்து வேகவைத்து உண்ண ஆரம்பித்தான்.

மீன் பிடிக்க கற்று கொண்ட நிலை[தொகு]

மீன் பிடிக்க கற்று கொண்ட நிலையில் மனிதன் உபகரணங்களை செய்ய கற்றுக்கொண்டான். நீர் நிலைகளில் உயிரினங்களை பிடித்து உண்ண ஆரம்பித்தான்.ஆறு பகுதியில், நீர் பகுதியில் குடியேறி கூட்டமாக வாழ ஆரம்பித்து, கருத்தை பரிமாறிக்கொள்ள சைகை மொழியை கற்றுக்கொண்டான்.

உழவுத்தொழில் செய்யக்கற்றுக் கொண்ட நிலை[தொகு]

உழவுத்தொழில் செய்யக்கற்றுக் கொண்ட நிலை ஒரிடத்தில் தங்கி விவசாயம் செய்யவும்,பயிர் பாதுகாக்கவும், விலங்குகளை வேலைக்கு பயன்படுத்தவும் கற்றுக்கொண்டான்.சிறு வேலைகள் எளிதாக்க உபகரணங்களை பயன்படுத்தினான்.

குறு நில வேந்தர் நிலை[தொகு]

குறு நில வேந்தர் நிலை மனிதன் மனிதனை அடிமையாக்கி உயர்வு,தாழ்வு உருவாக்கி,ஆட்சி புரிந்து உரிமை கொண்டாட ஆரம்பித்தான். 6வர்த்தக வியாபார செய்ய ஆரம்பித்த நிலை சமுதாய உருவாகி தேவையின் அடிப்படையில் கூட்டு முயற்சியின் பலனை அடைய வேளாண்மை மட்டுமின்ரி ஏனைய தொழில்களையும் செய்ய ஆரம்பித்தான்.

தொழிற்சாலைகள் எற்படுத்தபட்ட காலநிலை[தொகு]

தொழிற்சாலைகள் எற்படுத்தபட்ட காலநிலை இயந்திரம், தொழிற்சாலை உருவாகி இயற்கை வளம் கண்டறிந்து புதுப்ப்து பொருள்கள் உருவாகின. அறிவியல் அணுகுமுறை, மூட நம்பிக்கை மாறி பகுத்தறிவு உருவாகி புது கண்டுபிடிப்பு, கோட்பாடுகள் உருவாகின.

நவீன கால நிலை[தொகு]

நவீன கால நிலை இந்நிலையை நாகரிக காலம் எனலாம். குடியரசு,மனித உரிமை மனித வள மேம்பாடு, பொருளாதார மேம்பாடு சம உரிமை போன்ற நல்ல செயல்கள் உருவாகிய காலம்.

சமுதாயத்தின் பயன்கள்[தொகு]

மனித நேயம் வளர்க்கவும்.,மனிதனின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும். மனித குல மேம்பாட்டிற்காகவும், உரிமையை பாதுகாக்கவும், கூட்டு முயற்சியின் பலனை அனுபவிக்கவும், தன்னிறைவு பெறவும் பயன்படுகிறது.

மேற்கோள்[தொகு]

[1]

  1. வெ வெங்கட்சுப்பிரமணியன் (2000). விரிவாக்கக் கல்வி. நியு செஞ்சுரி ஹவுஸ் பி லிட். பக். 110.