சமுச்சய உவமையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமுச்சய உவமையணி என்பது உவமையணி வகைகளுள் ஒன்றாகும்.உவமிக்கப்படும் பொருள் உவமையோடு ஒரு பண்பில் மட்டும் ஒப்பாகாமல் இதனாலும் ஒக்கும் என வருவது சமுச்சய உவமையாகும். (சமுச்சயம்- இரண்டு முதலியவற்றின் கூட்டம்.) சான்று:

அளவே வடிவொப்ப தன்றியே பச்சை

இளவேய் நிறத்தானும் ஏய்க்கும்- துளவேய் கலைக்குமரி போர் துளக்கும் காரவுணர் வீரம் தொலைக்குமரி ஏறுகைப்பான் தோள். விளக்கம்:
அளவு வடிவு ஒப்பதன்றி நிறாத்தானும் ஏய்க்கும் என்று கூறப்பட்டிருப்பதால் இது சமுச்சய உவமையாயிற்று. சமுச்சய உவமையை வீர சோழியம் 'உம்மை உவமை' எனக் கூறுகிறது.

உசாத்துணை[தொகு]

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுச்சய_உவமையணி&oldid=959089" இருந்து மீள்விக்கப்பட்டது