சமிர்பேட்டை ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சமீர்பேட்டை ஏரி
Shamirpet Lake
Shamirpet Lake.jpg
அமைவிடம்ஐதராபாத்து
ஆள்கூறுகள்17°36′36″N 78°33′47″E / 17.610°N 78.563°E / 17.610; 78.563ஆள்கூறுகள்: 17°36′36″N 78°33′47″E / 17.610°N 78.563°E / 17.610; 78.563
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள் இந்தியா

சமிர்பேட்டை ஏரி (Shamirpet lake) தென்னிந்திய பிராந்தியமான தெலுங்கானா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் என, இருமாநில தலைநகராக விளங்கும் ஐதராபாத்து அருகே உள்ள ஒரு செயற்கை ஏரியாகும். மேலும் சிக்கந்தராபாத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இது, ஐதராபாத் நிசாம் ஆட்சியின் போது கட்டப்பட்டது.

இந்த ஏரி பல தரப்பட்ட பறவைகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளதால் பறவைகளை காணத் தகுந்த ஒரு நல்ல இடமாக கருதப்படுகிறது. இந்த ஏரியின் அருகில் தெலுங்கானா அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா பயணிகளின் விடுதிகள் உள்ளன[1]. இந்த ஏரியின் அருகில் வளைவான ஒரு சாலை அமைந்துள்ளது. ஏரியை சுற்றி பல தனியார் சுற்றுலா விடுதிகளும் தாபா என்று அழைக்கப்படும் உணவகமும் உள்ளன. மிகவும் பிரிசித்தி பெற்ற நான்கு நட்சத்திர அலங்கிரிட்டா தங்கும் விடுதி மற்றும் லியோனியா தங்கும் விடுதிகளும் மிக அருகாமையில் அமைந்துள்ளது. புகழ் வாய்ந்த நல்சார் சட்டப்பல்கலைக்கழகம், பொது நிறுவனம் மற்றும் அறிவியல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்- பிலானி(ஐதராபாத்து (இந்தியா)) இவற்றின் அனைத்து வளாகங்களும் ஏரியின் அருகாமையில் உள்ளது. அங்கு ஜவகர்லால் மான் பூங்கா உள்ளது . அதில் ஏராளமான மான்கள் உள்ளன. அத்துடன் அந்த பூங்காவில் பச்சைகிளிகள் மற்றும் பல வகையான பறவைகள் உள்ளன. ஏரிக்கு அருகில் இருக்கும் இந்த மான் பூங்காவினை தெலுங்கான அரசாங்கம் பாதுகாத்து வருகிறது. இந்த இடத்திற்கு பலதரப்பட்ட மக்கள் சுற்றுலா செல்கின்றனர். பல தெலுங்கு திரைப்படங்கள் இங்கு படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளன. இந்த ஏரியில் பல பேர் மூழ்கிய வழக்குகள் உள்ளன . அதனால் இந்த ஏரியைச் சுற்றி எச்சரிக்கை செய்யும் பாதுகாப்புக்குழு சமீர்பேட்டை ஏரி பகுதி காவல்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

படிமக்கோப்புகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிர்பேட்டை_ஏரி&oldid=3243102" இருந்து மீள்விக்கப்பட்டது