உள்ளடக்கத்துக்குச் செல்

சமிமா அக்தர் லிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமிமா அக்தர் லிசா
Shamima Akter Liza
நாடுவங்காளதேசம்
பிறப்புஅக்டோபர் 26, 1989 (1989-10-26) (அகவை 36)
பட்டம்பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் (2011)
பிடே தரவுகோள்2114 (நவம்பர் 2018)
உச்சத் தரவுகோள்2207 (திசம்பர் 2017)

சமிமா அக்தர் லிசா (ShamimaAkter Liza) என்பவர் வங்காள தேச நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீராங்கனையாவார். 1989 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 2011 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு வழங்கும் பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். 2005, 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வங்காளதேசத்தின் மகளிர் சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றுள்ளார்.[1]

சதுரங்க வாழ்க்கை

[தொகு]

சமிமா அக்தர் லிசா 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலக சதுரங்க கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றார். 2014-ஆம் ஆண்டில், பிரான்சின் கேன்சு நகரில் நடைபெற்ற 28 ஆவது கேன்சு குளிர்கால சதுரங்க விழாவில் லிசா 66 ஆவது இடத்தைப் பிடித்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Liza regains chess title". The Daily Star. February 19, 2014. http://www.thedailystar.net/liza-regains-chess-title-12011. பார்த்த நாள்: September 17, 2015. 
  2. "Liza 66th in Cannes". The Daily Star (Bangladesh). March 4, 2014. http://www.thedailystar.net/liza-66th-in-cannes-13925. பார்த்த நாள்: September 17, 2015. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிமா_அக்தர்_லிசா&oldid=4429070" இலிருந்து மீள்விக்கப்பட்டது