சமவெளிப் பழங்குடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென் செயினே(Cheyenne) பேரவை 44 தலைவர் (Lawrence Hart, Darryl Flyingman, Harvey Pratt[1][2]) ஓக்லஹோமா நகரம், 2008

பிளெயின்சு இந்தியன்சு (ஆங்கிலம்: Plains Indians) என ஐரோப்பியரால் அடையாளப்படுத்தப்படும் சமவெளிப் பழங்குடிகள் வட அமெரிக்காவின் பெரு சமவெளிப் பகுதிகளில் வசித்து வந்த பழங்குடி மக்கள் ஆவர். சமவெளிப் பழங்குடிகள் எனப்படுவர்கள் தமக்கான மொழிகளையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் கொண்ட பல்வேறு குடிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[3] இவர்கள் ஐரோப்பிய காலனித்துவ அரசுகளான கனடாவையும் ஐக்கிய அமெரிக்காவையும் எதிர்த்து நெடுங்காலம் நடத்திய, நடத்திவரும் எதிர்ப்புப் போராட்டங்களாலும், இவர்களின் பண்பாட்டு வாழ்வியல் தனித்துவங்களாலும் பரவலாக அறியப்படுகிறார்கள். வட அமெரிக்கப் பழங்குடிகள் என்றவுடன் இலக்கியத்திலும், ஓவியத்திலும் ஊடகங்களிலும் பெரும்பாலும் சித்தரிக்கப்படும் மக்கள் இந்த குடிகளைச் சார்ந்தவர்களே.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. OSBI Forensic Art
  2. Brown
  3. "Preamble." Constitution of the Pawnee Nation of Oklahoma. Archived 2013-10-07 at the வந்தவழி இயந்திரம். Retrieved 5 Dec 2012.