சமற்கிருதம் உள்வாங்கிக்கொண்ட தமிழ்ச்சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமற்கிருதம் உள்வாங்கிக்கொண்ட தமிழ்ச்சொற்கள் (Tamil loanwords in Sanskrit) இங்குப் பட்டியலிடப்படுகின்றன.

அறிமுகம்[தொகு]

சமற்கிருதச் சொற்களில் ஐந்தில் இரு பகுதிச் சொற்கள் தமிழ் வேர்ச்சொற்களிலிருந்து பிறந்தவை எனத் தேவநேயப் பாவாணர் கூறுகிறார்.

பட்டியல்[தொகு]

வடசொல் ஒலிப்பு தமிழ்ச்சொல் விளக்கம்
हृदय ஹ்ருʼத³ய இதம் இல் என்னும் வேர்ச் சொல் குத்தல், துளைத்தல் போன்ற பொருள்களையும் உடையது. இதமானது உட்குழிவானதும் உட்டுளையுள்ளதும் ஆதலால், இல்–இத்து–இது–இதம் என்றவாறு இதம் என்ற சொல் தோற்றம் பெற்றது.[1]
रक्त ரக்த அரத்தம் பொதுவாக, அரத்தம் சிவப்பு நிறமானது.[2] தீயின் நிறம் சிவப்பு. உல் என்னும் வேர்ச்சொல்லின் அடியாகத் தோன்றிய எல், எர் போன்றவை, தீ, தீயின் நிறம், தீயின் நிறத்தையுடைய பொருள்கள் போன்றவற்றைக் குறிக்கும். உல்–அல்–அல–அலத்தம் என்றவாறு சிவப்பு நிறப் பொருளைக் குறிக்கும் அலத்தம் என்னுஞ் சொல் பிறந்தது. லகரத்திற்குப் பதிலாக ரகரம் எழுத்துப் போலியாக நின்று அரத்தம் தோன்றியது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. இரா. மதிவாணன் (1993). செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி முதன்மடலம்–இரண்டாம் பாகம் (ஆ, இ, ஈ). செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். பக். 283. http://www.tamilvu.org/library/ldpam/ldpam01/ldpam012/images/ldpam012283.jpg. 
  2. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் 1. பக். 57. http://www.tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=251&pno=57. 
  3. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் (1985). செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி முதன்மடலம்–முதற் பகுதி அ. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். பக். 333. http://www.tamilvu.org/library/ldpam/ldpam01/ldpam011/images/ldpam011333.jpg.