சமரகரவீரன்
சமரகரவீரன் Samaragrawira Sri Maharaja Samaragrawira Indra Raja Mataram | |||||
---|---|---|---|---|---|
Rakai Warak Dyah Manara Rakai Warak Dyah Watukura Lingganarottama Satyajayabhumi | |||||
சிறீவிஜயம்–மாதரம் அரசர் | |||||
ஆட்சிக்காலம் | 800—819 | ||||
முன்னையவர் | தரணிந்திரன் | ||||
பின்னையவர் | சமரதுங்கன் (Samaratungga) | ||||
|
|
சமரகரவீரன் அல்லது ராக்காய் வாராக் (ஆங்கிலம்: Samaragrawira அல்லது Sri Maharaja Samaragrawira; இந்தோனேசியம்: Srī Mahārāja Rakai Warak அல்லது Rakai Warak Dyah Manara; அல்லது Rakai Warak Dyah Watukura Lingganarottama Satyajayabhumi; ஜாவானியம்: Sri Maharaja Rakai Warak) என்பவர் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் ஆட்சியாளர் ஆவார்.[1]:92
அதே வேளையில் மத்திய ஜாவாவில் இருந்த மாதரம் இராச்சியத்தின் அரசராகவும் பொறுப்பு வகித்தார். சமரகரவீரன், சைலேந்திர அரச மரபைச் சேர்ந்தவர் ஆவார்.
பொது
[தொகு]மாதரம் இராச்சியத்தின் ஆளுமையின் கீழ் சிறீ விஜயப் பேரரசு அமையப் பெற்றதும், மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த அதே அரசர்கள் சிறீ விஜயப் பேரரசையும் ஒருசேர ஆட்சி செய்தனர். மந்தியாசி கல்வெட்டில் (907); (Mantyasih inscription) அதாவது மாதர இராச்சியத்தின் மன்னர்கள் பட்டியலைக் கொண்ட கல்வெட்டில் சமரகரவீரனின் பெயர் காணப்படுகிறது.
தரணிந்திரனின் வாரிசான சமரகரவீரன், 800—819-ஆம் ஆண்டுகளின் காலக்கட்டத்தில், சிறீ விஜயப் பேரரசை ஆட்சி செய்தார்.[2]
வரலாறு
[தொகு]இந்தோனேசிய வரலாற்றாசிரியர் சிலாமெட் முல்ஜானா (Slamet Muljana) முன்வைத்த ஒரு கோட்பாடு; சமரகரவீரனின் அசல் பெயர் சமரக்ரவீரர் என்றும்; அவர் சிறீ விஜய மன்னர் பாலபுத்திர தேவாவின் (Balaputradewa) தந்தை என்றும் கூறுகிறது.
எனினும், நாளந்தா கல்வெட்டின்படி, பாலபுத்திரதேவா என்பவர், சோம வம்சத்தைச் சேர்ந்த தருமசேதுவின் மகள் தேவி தாராவுக்குப் (Tara Dharmasetu) பிறந்த சமரக்ரவீரரின் மகனாவார். பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் தருமசேது சிறீ விஜய இராச்சியத்தின் மன்னர் என்று நம்புகிறார்கள்.
உண்மையில், பாலபுத்திரதேவா தன் தாத்தாவிடம் இருந்து சுமாத்திரா தீவின் அரியணையைப் பெற்றார். இதுவே வரலாற்றாசிரியர் சிலாமெட் முல்ஜானாவின் கருத்தும் ஆகும். பாலபுத்திரதேவா தருமசேதுவிடம் இருந்து சிறீ விஜய அரியணையைப் பெறவில்லை; சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், பாலபுத்திரதேவா சிறீ விஜயத்தின் அரசராக முடிந்தது என்றும்; சிலாமெட் முல்ஜானா தம் கருத்தை முன்வைக்கிறார்.
மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
- ↑ Slamet Muljana (2006). Sriwijaya. LKIS, Yogyakarta.
சான்றுகள்
[தொகு]- Marwati Poesponegoro & Nugroho Notosusanto. 1990. Sejarah Nasional Indonesia Jilid II. Jakarta: Balai Pustaka
- Slamet Muljana. 2006. Sriwijaya (terbitan ulang 1960). Yogyakarta: LKIS
- Ayatrohaedi. 2005. SUNDAKALA Cuplikan Sejarah Sunda Berdasarkan Naskah-naskah "Panitia Wangsakerta" Cirebon. Bandung: Pustaka Jaya