சமமான மனநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமமான மனநிலை == # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள

சமமான மனநிலை சமமான மனநிலை என்பது அமைதியான மனதுடன் இருப்பது என்பதைக் குறி.க்கும் .மன அமைதி உடையவன் எப்போதும் உணர்ச்சி வயப்பட மாட்டான் விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லாவற்றையும் கவனிப்பான்.அவனுக்கு தன்னுடனோ உலகத்துடனோ ஒரு சண்டையும் இராது .எல்லோர் மீதும் அனுதாபத்துடன் இருப்பான் அவன் தன மனத்தில் உணர்ச்சி வெறுப்பு இவற்றின் சாயல் கூட ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறான் .அவை ஏற்படின் அவற்றை அடக்கவும் மிகைக்கவும் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறான் . அவனுக்கு மற்றவர் மீது அனுதாபம் கொள்வது எளிதாகிறது. மற்றவர்களின் மன நிலையை புரிந்து கொள்கிறான் .அந்த சூழலில் அவர்களை கண்டிப்பது,அவர்களுக்கு எதிராக தன்னை ஆக்கிக் கொள்வது எத்துணை பெரிய அறிவீனம் என்பதையும் அறிந்து கொள்கிறான் .இவ்விதம் அவன் இதயத்தில் ஒரு தெய்வீக அருள் உணர்வு வளர்கிறது.அந்த தெய்வீக அருளை கட்டுப்படுத்த முடியாது.அது வாழபவை ,முயலுபவை, துயர் உறுபவை அனைத்தின் மீதும் அனு தா ப ம் கொள்ளுவான்.

சம மனநிலை இல்லாத மனிதர்கள் : சம மனநிலை இல்லாத நிலை என்பது தான் நினைத்தது சரி என்று நினைப்பதும் விவாதிப்பதும் ஆகும் .தன கருத்திற்கு மாறானவை அனைத்தும் தவறு என்று சாதிப்பான். பிறர் கொண்டிருக்கும் கருத்திலும் ஏதாவது நியாயம் இருக்கும் என்று அவனால் எண்ணவே இயலாது .பிறரை எதிர்ப்பதிலும் பிறர் கூறுவதை மறுப்பதிலும் பிறர் எதிர்ப்பிலிருந்து தன்னை காப்பதிலும் அவனின் முழு கவனமும் ஈடு பட்டிருக்கும்.அவன் மனஅமைதி பற்றி ஒன்றும் அறிந்திருக்க மாட்டான் அ வ ன் உணர்ச்சிக்கும் வெறுப்புக்கும் ஆட்பட்டிருக்கும் போது அவன் குருடனாகவே இருக்கிறா ன் .அவன் தன்னிடத்தில் உள்ள நன்மையையும் பிறரிடத்தில் உள்ள தீமையையும் தவிர்த்து வேறு எதுவும் அவன் கண்களுக்கு புலனாவதில்லையில் அவன் தன்னையே புரிந்து கொள்ளாதிருக்கிறான் .பிறரை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்.பிறரை கண்டிப்பது சரி தான் என கருதுகிறான்.அதனால் மற்றவர்கள் மீது ஒருவித குருட்டு வெறுப்பு ஏற்படுகிறது .இதனால் அவன் வாழ்க்கையை பழிக்கிறான் ,தன்னுடைய சகோதர ர்களை ,சொந்தங்களை விட்டுப் பிரிகிறான் .தன்னைத தானே சித்திரவதை செய்து கொள்கிறான் .இந்த சம மனநிலையை அடைவது எங்கனம் ? 1.உள்ளத்தூய்மை : உள்ளத்தூய்மை ஒரு தலை சார்பற்ற அறியும் திறனை வழங்கும் .இத்திறன் சம மனநிலைக்கு வழி கோலும் .உள்ளததூய்மை இல்லா மனிதன் உணர்ச்சி அலைகளால் அடித்து செல்லப் படுகிறவனாய் இருக்கிறான் .ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் தான் குடி இருக்கிறார் அம் மனிதனுக்கு மரியாதை செலுத்தும்போது அ நத கடவுளுக்கே மரியாதை செலுத்துவதற்கு சமம் -காஞ்சி மகா பெரியவர் சம மன நிலையின் விளைவுகள் : 1.அம்மனிதனின் நாட்கள் இனிமையாக இருக்கும் . 2.அன்பு,அமைதி அருள் இவற்றிற்கு செல்லும் பாதைகளை பிடித்து நடப்பான். 3வாழ்வில் நிகழும் சம்பவங்கள் எதுவும் நிலைகுலைத்து விடுவதில்லை . 4.அவன் வெற்றியை கண்டு மகிழ்வால் துள்ளுவதுமில்லை ,தோல்வியை கண்டு துயரால் சோர்ந்து வீழ்ந்து விடுவதும் இல்லை . 5வருத்தங்கள் ,ஏக்கங்கள் ,ஏமாற்றங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது2.நிலையாமை இந்த உலகம் தர்ம சத்திரம் போன்றது .ஒருவரும் நிரந்தரமாக இருக்க போவதில்லை ஆனால் நாம் செய்யும் நன்மைகள் மட்டும் வரும் தலைமுறையினரால் பேசப்படும்.ஒருவர் வருவதும் ஒருவர் போவதும் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற ஞானம் சம மனநிலைக்கு வழி கோலும் . 3.மனோ பாவம் மனிதனுடைய பல பிரச்சினைகளுக்கு காரணம் அவனது மனோபாவம் .நான் என்பது அகங்காரம் .எனது என்பது மமகாரம் .அகங்காரமும் அதிலிருந்து பிறக்கும் மமகாரமும் தான் நம்மை தொடர் போராட்டங்களிலும் துக்கத்திலும் ஆழ்த்துகின்றன.இதனை திருவள்ளுவர் "யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் " என்று எழுதுகிறார் .அந்த காலத்தில் இவற்றை தடுத்து நிறுத்த குருமார்கள் இருந்தார்கள்.இப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் இம் மனோ பாவத்தை ஏற்படுத்த வேண்டும் . பரபரப்புடன் இருப்பது மனித இயல்பு .அதனால் ஆரம்பத்தில் மனதை அமைதி படுத்த சிறிது பிராணாயமம் அதன் பின் தியானம் செய்யலாம் -சாரதா அன்னை ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வீகத்தன்மை உள்ளது.இறைவன் அவனுக்கு அளிக்கும் ஒரு வாய்ப்பும் அவனுள் இருக்கிறது -அரவிந்தர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் தான் குடி இருக்கிறார் அம் மனிதனுக்கு மரியாதை செலுத்தும்போது அ நத கடவுளுக்கே மரியாதை செலுத்துவதற்கு சமம் -காஞ்சி மகா பெரியவர் சம மன நிலையின் விளைவுகள் : 1.அம்மனிதனின் நாட்கள் இனிமையாக இருக்கும் . 2.அன்பு,அமைதி அருள் இவற்றிற்கு செல்லும் பாதைகளை பிடித்து நடப்பான். 3வாழ்வில் நிகழும் சம்பவங்கள் எதுவும் நிலைகுலைத்து விடுவதில்லை . 4.அவன் வெற்றியை கண்டு மகிழ்வால் துள்ளுவதுமில்லை ,தோல்வியை கண்டு துயரால் சோர்ந்து வீழ்ந்து விடுவதும் இல்லை . 5வருத்தங்கள் ,ஏக்கங்கள் ,ஏமாற்றங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது மேற்கோள் நூல்கள் : 1.வெற்றியும் மகிழ்ச்சியும் ,மூலம்:ஜேம்ஸ் ஆலன் தமிழாக்கம் அப்துல் ரஹீம் ,யுனிவெர்சல் பப்ளிஷர்ஸ் சென்னை ஜூலை 2014. 2.ஆன்மீக பொன்மொழிகள் ,தொகுப்பாசிரியர் க .முத்தழகர் லியோ புக் பப்லிஷ்ர்ஸ் ,சென்னை 2013 3.நினைப்பதும் நடப்பதும் ,சுகி சிவம்.,கற்பகம் புத்தகாலயம் ,சென்னை ஆகஸ்ட் 2013


. .

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமமான_மனநிலை&oldid=2377082" இருந்து மீள்விக்கப்பட்டது