உள்ளடக்கத்துக்குச் செல்

சமமட்ட மஞ்சரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மட்டச்சிகரி அல்லது மட்டநுனிப்பூந்துணர் (Corymb) என்பது தாவரங்களில் உள்ள மலர்களைத் தாங்கிய மஞ்சரி ஆகும். இந்த வகை மஞ்சரியில் விளிம்புகளில் உள்ள மலர்கள் நீண்ட மலர்க்காம்புகளையும் உள்வட்டத்தில் உள்ள மலர்கள் சிறிய மலர்க்காம்புகளையும் கொண்டுள்ளன. பார்ப்பதற்கு மஞ்சரியில் உள்ள அனைத்து மலர்களும் ஒரே மட்டத்தில் காணப்படுகிறது. மேற்பக்கம் தட்டையானதாக, மேலோட்டமாக பார்ப்பதற்கு அம்பெல் (குடைப்பூந்துணர்) வகையை ஒத்ததாகவும், கூட்டுப் பூத்திரள் போன்ற கிளையமைப்பையும் கொண்டுள்ளன. இவ்வகையான மஞ்சரியில் மலர்களின் அமைப்பு இணையாகவோ அல்லது குறுக்கு மறுக்காகவோ அமைந்து குவிந்தோ அல்லது தட்டையாகவோ தோற்றமளிக்கிறது.

மலோய்டியே குடும்ப சிற்றினங்களான கிராடியேகசு மற்றும் ரோவன்சு மட்டச்சிகரி வகை மஞ்சரியினைக் கொண்டுள்ளது. "நார்வே மேப்பிள்", "யெர்பா மேட்" போன்றவைகளும் மட்டச்சிகரி வகை மஞ்சரிக்கு உதாரணங்களாகும்.

மட்டச்சிகரியைக் குறிக்கும் ஆங்கிலச் சொலான corymb என்பது பண்டையக் கிரேக்கச் சொல்லான "korymbos" என்பதிலிருந்து தோன்றியது. இக்கிரேக்கச் சொல்லுக்கு "மலர் அல்லது பழக்கொத்து" என்பது பொருளாகும்.[1]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brown, Roland Wilbur (1956). The Composition of Scientific Words. Washington, D.C.: Smithsonian Institution Press. p. 214.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமமட்ட_மஞ்சரி&oldid=4057234" இலிருந்து மீள்விக்கப்பட்டது