சமநிலைப் புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு தாவரத்திற்குக் கார்பன் டை ஆக்சைடின் செறிவு குறைவாகவும் தட்டுப்பாடின்றித் தீவிரமான ஒளியும் கிடைக்கும் நிலையில் ஒளிச்சேர்க்கையின் வீதம் அத்தாவரத்தின் சுவாச அளவுக்குச் சரிசமமாக இருக்கும். இடையறாது நடைபெறும் சுவாசமும் ஒளிச் சுவாசமும் இதில் அடங்கும். கார்பன் டை ஆக்சைடின் எந்த செறிவு நிலையில் ஒளிச்சேர்க்கையானது சுவாசித்தலுக்குச் சமமாக இருக்கிறதோ, அது கார்பன் டை ஆக்சைடு சமநிலைப் புள்ளி (Compensation point) எனப்படும்.

கார்பன் டை ஆக்சைட் சமநிலைப் புள்ளி நிலையில் ஒளிச்சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவு, சுவாசித்தலில் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கு சமமாகும்[1]. மேலும், இந்த நிலையில் ஒளிச்சேர்க்கையின் நிகர உற்பத்தி ஏதுமில்லை. (அதாவது, சமநிலைப்புள்ளியின் போது, ஒளிச்சேர்க்கையின் நிகர உற்பத்தி பூச்சியம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ESRL / Mauna Loa CO2 annual mean data, [1].[2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமநிலைப்_புள்ளி&oldid=2745744" இருந்து மீள்விக்கப்பட்டது