உள்ளடக்கத்துக்குச் செல்

சமத்துவ மற்றும் உள்ளடக்க மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமத்துவ மற்றும் உள்ளடக்க மையம்
Centre for Equity and Inclusion
உருவாக்கம்2009
நிறுவனர்சாரா அப்துல்லா பைலட்டு மற்றும் உலோரா கிருட்டிணமூர்த்தி பிரபு
வகைஅரசு சார்பற்ற அமைப்பு
நோக்கம்பெண்களின் உரிமைகள் மற்றும் பெண் தொழில்முனைவோர்கள் முன்னேற்றம்
தலைமையகம்
தலைவர்
சாரா அப்துல்லா பைலட்டு
செயல் இயக்குநர்
உலோரா கே பிரபு
தாய் அமைப்பு
செய் சவான் செய் கிசான் அறக்கட்டளை
வலைத்தளம்www.cequinindia.org

சமத்துவ மற்றும் உள்ளடக்க மையம் (Centre for Equality and Inclusion) என்பது இந்தியாவின் புது தில்லியை தளமாகக் கொண்ட ஓர் அரசு சாரா அமைப்பாகும். பெண்களின் உரிமைகளை இவ்வமைப்பு ஊக்குவிக்கிறது. 2009 ஆம் ஆண்டு சமூக சேவகர் சாரா அப்துல்லா பைலட்டு மற்றும் உலோரா கிருட்டிணமூர்த்தி பிரபு ஆகியோர் இணைந்து இவ்வமைப்பை நிறுவினர்.[1] and Lora Krishnamurthi Prabhu.[2][3]

2010 ஆம் ஆண்டில் பொது இடங்களில் பாலின அடிப்படையிலான வன்முறை குறித்து சமத்துவ மற்றும் உள்ளடக்க மையம் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக தேசிய மகளிர் ஆணையம் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் அமைப்பும் இணைந்து தேசிய அளவிலான மாநாட்டிற்கு திட்டமிட வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் சுபான் நூல்கள் பதிப்பகம் பின்தொடரும் பயம் என்ற புத்தகத்தை வெளியிட்டது. சமத்துவ மற்றும் உள்ளடக்க மையம் வழங்கிய குறிப்பிடப்பட்ட பல பரிந்துரைகள் நீதிபதி வர்மா குழு அறிக்கை மற்றும் குற்றவியல் சட்ட திருத்தச் சட்டத்தில் இணைக்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டில், சமத்துவ மற்றும் உள்ளடக்க மையமும் உமீடு அமைப்பும் கூட்டு சேர்ந்து, பெண்களுக்கு மின்சார இழுவை வண்டிகளை வழங்கி அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் ஒரு வழியை முன்னெடுத்தன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Sara Abdullah Pilot on equality and inclusion for women". femina.in (in ஆங்கிலம்). Retrieved 2023-05-20.
  2. ↑ "Sara Pilot: Stitching a Story of Empowerment". CORALESQUE (in ஆங்கிலம்). 2012-03-18. Retrieved 2023-05-20.
  3. ↑ "The many shades of a woman". Hindustan Times (in ஆங்கிலம்). 2014-03-08. Retrieved 2023-05-20.
  4. ↑ "'Ummeed ki rickshaw' - An attempt to empower women". Zee News. 6 September 2012 இம் மூலத்தில் இருந்து 12 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141012113857/http://zeenews.india.com/news/nation/ummeed-ki-rickshaw-an-attempt-to-empower-women_798100.html. பார்த்த நாள்: 25 October 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]