சமத்துவ குமுகங்களின் கூட்டமைப்பு
Appearance
சமத்துவ குமுகங்களின் கூட்டமைப்பு (Federation of Egalitarian Communities) என்பது சமத்துவ (egalitarian) திட்டக் குமுகங்களின் ஒரு கூட்டமைப்பு ஆகும். இதில் ஆறு திட்டக் குமுகங்கள் இனைந்துள்ளன.
கொள்கைகள்
[தொகு]- நிலம், உழைப்பு, வருமானம், மற்றும் பிற வளங்களை பொதுவில் வைத்திருத்தல்
- உறுப்பினர்களின் தேவைகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளல். அவர்களின் உழைப்பை பெற்றுக் கொண்டு அதையும் பிற பொருட்களையும் சமமாகவும் தேவைக்கு ஏற்றவாறும் பகிர்தல்.
- வன்முறையின்மை கடைப்பித்தல்
- அனைத்து உறுப்பினரும் பங்களிக்க சமனான வாய்ப்புத் தரும் ஒரு மடிவெடுக்கும் முறையைப் பயன்படுத்தல். இணக்க முடிவு, வாக்கெடுப்பு அல்லது மேல் முறையீடு, முறையீடு மறுப்பு ஆகியவை ஊடாக அந்த வாய்ப்புக்களை உறுதிசெய்தல்.
- எல்லா மக்களுமிடையே சமத்துவதை ஏற்படுத்துவதற்கான செயற்படுதல். இனம், வர்க்கம், நம்பிக்கை, வயது, பால், பாலியல் அமைவு அல்லது பாலியல் அடையாளம் ஆகிய எவற்றின் அடிப்படையிலும் பாகுபாட்டை அனுமதிப்பது இல்லை.
- இன்றைய, நாளைய தலைமுறையினருக்கு ஆக இயற்கை வளங்களை பேணல். சூழலியல் விழிப்புணர்வை, செயல்முறைகளை மேம்படுத்தல்.
- குழுத் தொடர்பாடல்களுக்கும், பங்கேற்புக்கும் ஏற்றா செயலாக்கங்களை உருவாக்கல். நபர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சூழலை வழங்கல்.