சமத்துவம் இப்போது
Appearance
சமத்துவம் இப்போது (Equality Now) என்பது பெண்களின் மனித உரிமைகளுக்காக வேலை செய்யும் ஒரு அரச சார்பற்ற அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1992 ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு பெண்களின் சிக்கல்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு அனைத்துலக வடிவகத்தை முன்னெடுக்கிறது. வன்புணர்வு, குடும்ப வன்முறை, இனப்பெருக்க உரிமைகள், கடத்தல், பெண் உறுப்பு சிதைப்பு, பொருளாதார அரசியல் சம வாய்ப்பு ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் தருகிறது.