சமண நாட்டங்கள்
தோற்றம்
சமண மதம் உலகியலை 12 கோணங்களில் பார்ப்பதாகச் சீவசம்போதனை என்னும் நூல் குறிப்பிடுகிறது. இவை சமணரின் சிந்தனைகள். [1]
சீவன் என்னும் உயிருக்கு நன்மை பயக்கும் சிந்தனைகள் இவை. இவற்றை 'அனுப்ரேக்ஷை' என்பர்.
சிந்தனை நாட்டமும், கதையும்
[தொகு]| சிந்தனை நாட்டம் | தமிழ் வழக்கு | கதை |
|---|---|---|
| அநித்தியம் | நிலையாமை | சகரன் |
| அசரணம் | புகலின்மை | முண்டகௌசிகன் |
| ஏகத்துவம் | தனித்தன்மை | வராங்கன் |
| அன்னியத்துவம் | உறவற்ற தன்மை | இராவணன் |
| சம்சாரம் | பிறவி மாறுதல் | வசந்த திலகை |
| உலகம் | உலகப் பற்று | சுகுமாரன் |
| அகசித்துவம் | அழுக்கு | கபௌமன் |
| ஆசிரவம் | வினை முடிவு | துவிபாயண குமாரன் |
| சம்வரை | வினையைத் தடித்தல் | பாகுபலி குமாரன் |
| நிர்ஜரை | வினையை உதிர்த்தல் | புஷப தந்தை |
| தருமம் | அறம் | பூமிபாலன் |
| போதி துல்லபம் | அறிவு பெறற்கருமை | படகஸ்தன் |
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ சிந்தனையோடு தொடர்புடையனவாகக் குறிப்பிடப்படும் கதைகள் நம் புழக்கத்தில் இல்லை