சமணர்களின் குகை கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணர் குகை ஓவியங்கள் உள்ளது.

அமைப்பு[தொகு]

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் ஒன்றியத்தில் சித்தன்னவாசல் என்ற பகுதியில்உள்ளது

சிறப்பு[தொகு]

சமணர்களால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.சமணர்கள் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டன.இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று உள்ளவை.இந்த ஓவியங்கள் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானவை. இவ்விடத்தை தமிழக அரசும் தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது.சுமார் 70மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும் தவம் செய்யும் இடமும் பல இடங்ஙகளில் குடைவறைகளும் காணப்படுகின்றன. சிறு மற்றம் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது.

புதிய கண்டுபிடிப்பு[தொகு]

சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முன்னாள் முதன்மைக்கல்வி அலுவலர் அருள்முருகன் அவர்கள் கண்டறிந்துள்ளார்.அங்குநான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்கிறது.அவற்றிக்கு பிரிவுப்பட்டை ஓவியம் புள்ளி ஓவியம் கோண ஓவியம் சக்கர ஓவியம் என பெயாிட்டிருக்கிறார்.