சமசுபூர் பறவைகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமசுபூர் பறவைகள் சரணாலயம் [1] (Samaspur Bird Sanctuary) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள இரே பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாலோன் தாலுகாவிலுள்ள இச்சரணாலயம் லக்னோ-வாரணாசி நெடுஞ்சாலையில் லக்னோவிலிருந்து 122 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது 1987 ஆம் ஆண்டு சுமார் 780 எக்டேர் நிலப்பரப்பில் சமசுபூர் சரணாலயம் நிறுவப்பட்டது. உஞ்சாகர் இரயில் நிலையமும் பர்சட்கஞ்சு விமானநிலையமும் சரணாலயத்திற்கு அருகில் உள்ள போக்குவரத்து வசதிகளாகும். நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த இடத்தைப் பார்வையிட சிறந்த நேரமாகும் . சுமார் 250 வகைக்கும் மேற்பட்ட பறவைகளை இங்கு காணலாம். இங்கு வருகைதரும் சில பறவைகள் 5000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான தொலைவிலிருந்து பறந்து வருகின்றன. சாம்பல் நிற வாத்து, Pintail, கிளுவை, ஐரோப்பிய நாமத்தலை பறவை, ஆண்டி வாத்து, சிவப்புத்தாரா, செண்டு வாத்து, சிறிய சீழ்க்கைச்சிரவி, புள்ளி மூக்கு வாத்து, கரண்டிவாயன், மீன் கொத்தி, பிணந்தின்னிக் கழுகு போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் மேலும் 12 வகையான மீன்களும் சமசுபூர் ஏரியில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Samaspur Bird Sanctuary". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.

புற இணைப்புகள்[தொகு]