சப்ராலா காட்டுயிர் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சப்ராலா காட்டுயிர் காப்பகம் (ஆங்கிலம் : Chaprala Wildlife Sanctuary), இந்திய மாநிலமான மகராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] [2]

அமைவிடம்[தொகு]

இது 139.44 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 118.33 சதுர கி.மீ பரப்பளவு காட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தெற்கில் பிரான்ஹிதா ஆறு பாய்கிறது. வடகிழக்கிலும், தெற்கிலும், மார்க்கண்டா, பெடிகுண்டம் மலைத் தொடர்கள் உள்ளன. நிலப்பரப்பின் பெரும்பகுதி அடர்ந்த காட்டுப் பகுதியாகவும், பசும்புல் படர்ந்த பகுதியாகவும் இருக்கின்றன.[1] இது நாக்பூரில் இருந்து 235 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த காப்பகத்துக்குள் ஆறு கிராமங்கள் உள்ளன.[2]

விலங்குகள்[தொகு]

இங்கு கரடி, நாய், மான், காட்டுப்பூனை, மயில், நரி உள்ளிட்ட விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றனர். அரிய உயிரினமான இந்திய அணில் இங்குள்ளது. இது மகாராஷ்டிர மாநிலத்தின் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. பறவைகளை கண்டு களிப்பதற்கென தனி பகுதியும் உண்டு.[1]

செடிகள்[தொகு]

இங்கு 245 வகையான செடிகள் உள்ளன.[1] காட்டுப் பகுதியில் தேக்கு மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.[2]

சான்றுகள்[தொகு]