உள்ளடக்கத்துக்குச் செல்

சப்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜர்னா பாசக் (பிறப்பு: 17 ஆகத்து 1946),[1] தனது மேடைப் பெயரான சப்னம் என்பதனால் அறியப்படும் இவர், வங்காளதேச–பாக்கித்தான் மேடை, திரைப்பட நடிகையாவார். நடிகர் வஹீத் முராத் 1968-ஆம் ஆண்டு வெளியான சாமுந்தர் திரைப்படத்தில் கதாநாயகி வாய்ப்பை வழங்கி, இவரை பாக்கித்தான் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். 1960, 1970 மற்றும் 1980களில் லாலிவுட்டில் பல திரைபப்டங்களில் நடித்தார்.

இவர் பலமுறை நிகார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், 13 முறை அந்த விருதை வென்றுள்ளார். இது ஒரு நடிகைக்கான அதிகபட்ச சாதனையாகும். இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] 28 ஆண்டுகள் பாக்கித்தான் திரைப்படத் துறையின் முன்னணி நடிகையாக விளங்கினார்.[3]

1968-ஆம் ஆண்டு கிழக்குப் பாக்கித்தான் பகுதியில் இருந்து மேற்கு பாக்கித்தான் பகுதிக்குக் குடிபெயர்ந்தார்.[4] 1990களின் இறுதி வரை அங்கு வாழ்ந்த இவர், பின்னர் தனது தாய்நாடான வங்காளதேசம் திரும்பினார்.[5]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சப்னம் 1946 ஆகத்து 17 அன்று, அன்றைய பிரித்தானிய இந்தியாவில் தாக்காவில், ஒரு வங்காள இந்துக் குடும்பத்தில் பிறந்தார்.[6] இவரது தந்தை நானி பாசக், தாக்காவைச் சேர்ந்த கால்பந்து நடுவராக இருந்தார். சிறுவயதில், பாடலில் ஆர்வம் கொண்ட தனது சகோதரியுடன் ஒப்பிடுகையில், சப்னம் சாகச மனப்பான்மை, ஆண் குழந்தையைப் போன்ற இயல்புடையவராக இருந்தார்.[7]

இவர் தொடர்ந்து நடனப் பயிற்சியும் மேற்கொண்டார். பின்னர் ஒரு திரைப்படத்தில் துணை நடனக் கலைஞராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இவரது கலை வாழ்க்கை தொடங்கியது.[8]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

இவரது தந்தை இவரை புல்புல் லலிதகலா அகாதமியில் சேர்த்தபோது சப்னத்தின் திரைப்பட வாழ்க்கை தொடங்கியது. இவரது தந்தையின் நெருங்கிய நண்பர், ஐ தேஷ் தோமர் அமர் திரைப்படத்தின் ஒரு நடனக் காட்சியில் இவருக்கு வாய்ப்பு பெற்றுத் தந்தார். பின்னர் ராஜ்தானிர் புக்கேய் திரைப்படத்தில் நடனக் கலைஞராக நடித்தார்.

அந்தத் திரைப்படத்தின் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், பார்வையாளர்கள் இவரை கதாநாயகியாக நடிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். அதன் பின்னரே இவர் தனது முதல் வங்காள மொழித் திரைப்படமான ஹரானோ தின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.[8]

இயக்குநர் எஹ்தேசாம், அன்றைய மேற்கு பாக்கித்தானில் தயாரிக்கப்பட்ட தனது உருதுத் திரைப்படமான சந்தாவில் இவரை நடிக்கத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, சப்னம் மேற்கு பாக்கித்தானுக்குக் குடிபெயர்ந்தார். அப்போது இவருக்கு உருது மொழி சரளமாகத் தெரியாததால், படப்பயிற்சிக்கான வசனங்கள் வங்காள மொழியில் எழுதப்பட்டன.

இந்தத் திரைப்படத்தின் இசையை இவரது கணவர் ராபின் கோஷ் இசையமைத்தார். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் மூலம், பாக்கித்தான் திரைப்படத் துறையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆனார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shazu, Shah Alam (2022-08-18). "I never wanted to live as a star: Shabnam". The Daily Star (in ஆங்கிலம்). Retrieved 2022-08-18.
  2. "Filmography of Shabnam". Pakistan Film Magazine website. Archived from the original on 23 May 2017. Retrieved 15 December 2022.
  3. "Meet Pakistan's biggest star from Bangladesh whom India hasn't celebrated!". Times of India Blog. https://blogs.timesofindia.indiatimes.com/priyanka-dasgupta-blog/meet-pakistans-biggest-star-from-bangladesh-whom-india-hasnt-celebrated/.
  4. Dasgupta, Priyanka (17 February 2018). "The biggest star you've never heard of". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kolkata/the-biggest-star-youve-never-heard-of/articleshow/62954182.cms.
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; pain என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. Dasgupta, Priyanka (17 February 2018). "The biggest star you've never heard of". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kolkata/the-biggest-star-youve-never-heard-of/articleshow/62954182.cms.
  7. Raza Zaidi (11 February 2017). "In conversation with Shabnam: Poster girl for Pakistani film in the 70s". Geo News. Retrieved 20 March 2021.
  8. 1 2 "Meet Pakistan's biggest star from Bangladesh whom India hasn't celebrated!". Times of India Blog. https://blogs.timesofindia.indiatimes.com/priyanka-dasgupta-blog/meet-pakistans-biggest-star-from-bangladesh-whom-india-hasnt-celebrated/.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்னம்&oldid=4535191" இலிருந்து மீள்விக்கப்பட்டது