சபோல்க் செம்மறி
Jump to navigation
Jump to search
சபோல்க் செம்மறியாடு (Suffolk sheep) என்பது ஆட்டுக்கறியை முதன்மைத் தேவையாக கொண்டு வளர்க்கப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும்.
விளக்கம்[தொகு]
இந்த செம்மறி ஆட்டு இனமானது இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஆட்டு இனமாகும். இவை பெரிய உடலமைப்பைக் கொண்டவை. இவற்றின் முகம், காதுகள், கால்கள் போன்றவை கருமை நிறத்தோடும், தலை மற்றும் காதுகளில் அடர்ந்த ரோமங்கள் இல்லாமலும் இருக்கக்கூடியன. இந்த ஆடுகளில் கிடா மற்றும் பெட்டைகள் என இரண்டுக்கும் கொம்புகள் கிடையாது. ஒரு சில கிடாக்களுக்கு கொம்புகள் இருக்குமிடத்தில் மொட்டுகள் காணப்படும். ஒரு ஆட்டிலிருந்து ஆண்டொன்றிற்கு 2.3 கி.கி ரோமம் உற்பத்தி செய்ய இயலும் வளர்ந்த கிடா 100-135 கி.கி எடையுடனும், பெட்டை 70-100 கி.கி எடையுடனும் இருக்கும் பெட்டை ஆடுகள் அதிகம் பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றவை.[1]