சபுத்ரா காஸ்
சபுத்ரா Chabutra | |
|---|---|
கிராமம் | |
| சபுத்ரா காஸ் | |
| ஆள்கூறுகள்: 31°45′58″N 76°30′42″E / 31.76611°N 76.51167°E | |
| நாடு | |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | ஹமீர்பூர் |
| தோற்றுவித்தவர் | சான்சார் சந்த் |
| அரசு | |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,152 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| வாகனப் பதிவு | HP 67, HP 22, HP 84 |
சபுத்ரா (Chabutra) என்று பரவலாக அறியப்படும் 'சபுத்ரா காஸ்' (Chabutra Khas) கிராமம், இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள தீரா சுஜான்பூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையகத்திலிருந்து 12.4 கி.மீ தொலைவிலும், தீரா சுஜான்பூரிலிருந்து 11.6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் மின்சாரத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் துணைப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன[1] . பள்ளத்தாக்கில் பாயும் பியாஸ் ஆற்றை நோக்கியவாறு இக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 177007 ஆகும். 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சபுத்ரா காஸ் கிராமத்தின் மக்கள் தொகை 1,051 முதல் 1,201 வரையிலும், அங்குள்ள மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 237-ஆகவும் இருந்தது[2]. 1943-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மேல்நிலைப் பள்ளி இங்குள்ளது; இது தற்போது 'பிஎம் ஸ்ரீ அரசு மூத்த மேல்நிலைப் பள்ளி' என்று அழைக்கப்படுகிறது.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Census of India, 1991: District census handbook. A & B. Village & town directory; Village & townwise primary census abstract: Bilaspur (in இந்தி). Controller of Publications. 1995. pp. XII, 36, 295. Retrieved 1 July 2022.
- ↑ "Tira Sujanpur Tehsil Population Hamirpur, Himachal Pradesh, List of Villages & Towns in Tira Sujanpur Tehsil".
- ↑ "Tira Sujanpur Tehsil Population Hamirpur, Himachal Pradesh, List of Villages & Towns in Tira Sujanpur Tehsil". Retrieved 1 July 2022.
- ↑ Census of India, 1981 (in இந்தி). Goel's Press, Shimla. 1984. pp. 108, 128, 133. Retrieved 1 July 2022.
- ↑ "GSSS CHABUTRA KHAS - Chabutra Khas, District Hamirpur (H.p.) (Himachal Pradesh)". Retrieved 1 July 2022.